சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் பைக் டீலர்கள் ஷோரூமிற்கு வர ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் மோட்டார்ஸ், பட்ஜெட் ரக வாகனங்களைத் தயாரிப்பதில் மிக முக்கியமான நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.

இந்நிறுவனம் இந்திய இளைஞர்களின் பெரும் எதிபார்ப்பில் இருக்கும் பல்சர் 125 மாடலை விரைவில் களமிறக்குவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

இந்நிலையில், பல்சர் 125 மடால் பைக்குகள் பஜாஜ் ஷோ ரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், டீலர்கள் இந்த பைக்கிற்கான புக்கிங்கையும், குறைந்த முன் பண தொகையில் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

இந்த பைக்குகள் உள்நாடு மட்டுமின்றி சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பஜாஜ் பல்சர் 125 மாடல் ரூ. 65,000 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் களமிறக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், வெளிநாடுகளில் என்ன தொகயில் அறிமுகமாக இருக்கிறது என்பது தெரியவில்லை.

சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

இந்த விலையானது, பல்சர் 150 மாடலைக் காட்டிலும் மிகக் குறைவானதாக இருக்கின்றது. புதிய பல்சர் 125 பைக்கின் விலையை விட குறைவானதாக இருந்தாலும், தரத்தில் 150 மாடலுக்கு இணையானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

இந்த பைக்கில் 125 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, மெக்ஸிகன் சந்தைக்கு ஏற்றுமதி செய்யும்போது, 12 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையிலும், முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் டிரம் பிரேக்குடனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

இத்துடன், இந்த பைக்கில் சிறப்பான பாதுகாப்பிற்காக, சிபிஎஸ் பிரேக் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட உள்ளது. ஆனால், இந்தியாவிற்கு இதைவிட சற்று குறைந்த திறனிலேயே இந்த பைக் அறிமுகமாக இருக்கின்றது.

இந்த பைக்குறித்த வீடியோவை எம்ஆர்டி என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இதனை நீங்கள் கீழே காணலாம்...

இந்தியாவில் களமிறக்கப்படும் பஜாஜ் பல்சர் பைக்கில், டிஸ்கவர் 125 மாடலில் இடம்பெற்றுள்ள அதே 125 சிசி திறன் கொண்ட எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது, 124.5 சிசி திறனை வெளிப்படுத்தும் ஏர் கூல்ட் எஞ்ஜினாகும்.

இது, 13.5 பிஎச்பி பவரையும், 11.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இந்த எஞ்ஜினிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இடம்பெற்றுள்ளது.

சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

பஜாஜ் நிறுவனத்தின் இந்த அப்கமிங் பைக்கில் சிபிஎஸ் பாதுகாப்பு வசதியுடன், பிஎஸ் தரத்திலான எஞ்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தரத்திலான எஞ்ஜினை பயன்படுத்துவது வருகின்ற 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் வடிவமைப்பை் பொருத்தவரை, பல்சர் 150 சிசி மாடலிடமிருந்தும், பல்சர் நியான மாடலிடமிருந்தும் பெறவிருக்கின்றது.

சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

அந்தவகையில், பல்சர் 150 மாடலிடமிருந்து ஹெட்லேம்ப் கௌல், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ப்யூவல் டேங்க் மற்றும் நீளமான இருக்கை உள்ளிட்டவற்றைப் பெற இருக்கின்றது. அதேபோன்று, அலாய் வீல் மற்றும் டயர் உள்ளிட்டவற்றையும் பல்சர் 125 சிசி பைக் 150 மாடலிடமிருந்து பெற இருக்கின்றது.

இதேபோன்று, கலர் ஹைட்லைட் மற்றும் ஸ்போர்ட்டி லுக்கினை பல்சர் நியான் மாடலிடமிருந்து புதிய பல்சர் 125 பைக் பெற உள்ளது.

சிறப்பான சம்பவத்திற்கு தயாராகுங்கள்... டீலர்களிடம் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது புதிய பல்சர்....

பஜாஜ் நிறுவனம், விற்பனை விகிதத்தை அதிகரிக்கும் விதமாகவும், 125சிசி சந்தையை தன் வசம் திருப்பும் இந்த பைக்க இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் வருகை ஹீரோ கிளாமர் எஃப்ஐ மற்றும் ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Bajaj Pulsar 125 Neon Spotted At Dealership As Launch Date Nears. Read In Tamil.
Story first published: Tuesday, August 13, 2019, 17:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X