வைரலாகும் புதிய பல்சர் 150 கிளாசிக் பைக்கின் வீடியோ: இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா...?

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கும் பல்சரின் புதிய மாடல் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

வைரலாகும் புதிய பல்சர் 150 கிளாசிக் பைக்கின் வீடியோ: இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா...?

பஜாஜ் நிறுவனம், விரைவில் அமலுக்கு வரவிருக்கும் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப அதன் தயாரிப்புகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், பல்சர் வரிசையில் உள்ள அனைத்து மோட்டார்சைக்கிள்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை அறிமுகம் செய்து வருகிறது.

வைரலாகும் புதிய பல்சர் 150 கிளாசிக் பைக்கின் வீடியோ: இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா...?

அவ்வாறு, ஏபிஎஸ் வசதியுடன் உருவாக்கப்பட்ட பல்சர் 150 கிளாசிக் மற்றும் பல்சர் 150 ட்வின்-டிஸ்க் மாடல் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்காக பஜாஜ் நிறுவனம், அதன் டீலர்களுக்கு அனுப்பி வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த ஒன்றை ஆட்டோமொபைல் இன்ஃபோ ஒன்லி என்ற தளம் வெளியிட்டுள்ளது.

வைரலாகும் புதிய பல்சர் 150 கிளாசிக் பைக்கின் வீடியோ: இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா...?

இந்த வீடியோவில், பல்சர் மோட்டார்சைக்கிளின் முன் பக்க வீலில் பொருத்தப்பட்டுள்ள ஏபிஎஸ் பிரேக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பிரத்யேக வசதியாக இணைக்கப்பட்டுள்ள லிஃப்ட்-ஆஃப் புரொடக்ஷன் சென்சார் அமைப்பும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் எஞ்ஜின் கவுன் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளன.

வைரலாகும் புதிய பல்சர் 150 கிளாசிக் பைக்கின் வீடியோ: இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா...?

கிளாசிக் 150 மோட்டார்சைக்கிளின் சைலென்சர் மேல் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கவசத்திற்கு குரோம் பூச்சு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 150 ட்வின் டிஸ்க் மாடலுக்கு மேட் பினிஷிங் வழங்கப்பட்டுள்ளது.

வைரலாகும் புதிய பல்சர் 150 கிளாசிக் பைக்கின் வீடியோ: இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா...?

பஜாஜின் இந்த இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே விதத்திலான, 149 சிசி திறனை வெளிப்படுத்தும் 2 வால்வ், ஏர் கூல்ட், ட்வின் ஸ்பார்க், டிடிஎஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8,000 ஆர்பிஎம்-இல் 14 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்-இல் 13.4 என்எம் டார்க்கையும் வழங்கும்.

வைரலாகும் புதிய பல்சர் 150 கிளாசிக் பைக்கின் வீடியோ: இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா...?

மேலும், பல்சர் 150 கிளாசிக் மோட்டார்சைக்கிளின் முன்பக்க வீலில் 240mm கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 130mm கொண்ட டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, பல்சர் ட்வின் டிஸ்க் மாடலின் முன்பக்கத்தில் 260mm டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 230mm டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய பாதுகாப்பு வசதியைப் பெற்ற பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிள்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு, ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பல்சர் 150 கிளாசிக் ரூ. 84,461 என்றும், ட்வின் டிஸ்க் பிரேக் கொண்ட பல்சர் 150 ரூ. 88,339 என்ற விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 2, 2019, 16:10 [IST]
English summary
Bajaj Pulsar 150 Classic & Twin-Disc ABS Reach Dealerships. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+