சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

பஜாஜ் நிறுவனம், அதன் பிரபல மாடல் ஒன்றில் சத்தமே இல்லாமல் சிறிய மாற்றத்தை (அப்டேட்) வழங்கியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

இந்தியாவின் பட்ஜெட் ரக இருசக்கர வாகன விற்பனையில் கொடி பறக்கும் நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், அதன் பிரபல பல்சர் 150 நியான் பைக்கில், சத்தமே இல்லாமல் சிறியளவிலான ஓர் அப்டேட்டினை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிகம் புகழ்வாய்ந்த பைக்காக பல்சர் வரிசை பைக்குகள் இருக்கின்றன. இதன்காரணமாக, பஜாஜ் நிறுவனம், அதன் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் பல்சர் வரிசையில் உள்ள பைக்குகள் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றன.

சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

இதன் வெளிப்பாடாக அவ்வப்போது, பல்சர் வரிசையில் புதிய மாடல்கள் மற்றும் அப்டேட்டுகளை அறிமுகம் செய்துவருகின்றது.

இந்நிலையில், பல்சர் 150 நியான் மாடலின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர்கின்ற வகையில் ஓர் சிறிய அப்டேட்டினை பஜாஜ் வழங்கியுள்ளது.

சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

அந்தவகையில், புதிய அப்டேட்டாக பெட்ரோல் டேங்கின் முன்பக்கத்தில் கூடுதலாக எக்ஸ்டென்ஷன் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்குறித்த எந்தவொரு தகவலையும் அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்த மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் பஜாஜ் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

மேலும், இந்த புதிய மாற்றத்தின் காரணமாக, அதன் விலையில் எந்தவொரு உயர்வும் செய்யப்படவில்லை.

முன்னதாக, இந்த பைக் ரூ. 71,200 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆகையால், பல்சர் வரிசையில் விற்பனைக் கிடைத்த மலிவான மற்றும் அனைவரையும் கவரும் பைக்காக அது இருக்கின்றது.

சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

ஆனால், சமீபத்தில்தான் இதன் விலையை அதிகரிக்கும் விதமாக ரூ. 4 ஆயிரம் உயர்த்தப்பட்டது. ஆகையால், பல்சர் 150 நியான் பைக்கின் விலை ரூ. 75,200-ஆக உயர்ந்தது. எனவே, தற்போது சற்று விலையுயர்ந்த மாடலாக அது மாறியுள்ளது. மேலும், இந்த விலையுயர்வு பைக்கின் விற்பனையை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த புதிய அப்டேட்டினை பஜாஜ் வழங்கியுள்ளது.

சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

பஜாஜ் பல்சர் 150 நியான் பைக்கின் விலை உயர்த்தப்பட்டாலும், அது விலைக்கேற்ற பைக்காக காட்சியளிக்கின்றது. ஏனென்றால், இந்த தரத்தில் கிடைக்கும் மற்ற பைக்குகள் 150 நியானைப் போன்று வசதிகளை வழங்குவதில்லை என்பது நாம் அறிந்த ஒன்று.

சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

இதன்காரணமாகவே, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் யூனிட் பஜாஜ் பல்சர்கள் விற்பனையாகியுள்ளன.

பஜாஜ் பல்சர் 150 நியான் தற்போது மூன்று விதமான வண்ணத் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அந்தவகையில், நியான் சில்வர், நியான் சிவப்பு, நியான் எழுமிச்சை பச்சை ஆகிய நிறங்களில் அது கிடைக்கின்றது.

சத்தமே இல்லாமல் பிரபல மாடலிற்கு புதிய மாற்றத்தை வழங்கிய பஜாஜ்... அது என்னனு தெரியுமா..?

இந்த பைக்கில் 149.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 14 பிஎஸ் மற்றும் 13.4 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

இந்த வரிசையில் கிடைக்கும் மலிவு விலைக் கொண்ட பைக்காக 125 நியான் காட்சியளிக்கின்றது. இது ரூ. 66,618 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 1, 2019, 14:39 [IST]
English summary
Bajaj Pulsar 150 Neon Gets Mild Update. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+