அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

அடுத்த வருடம் சாலையை கலக்க காத்திருக்கும் பஜாஜ் பல்சர் 150 மாடல் பைக்கின் ஸ்பை படம் வெளியாகியுள்ளன. இந்த பைக்குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல் பைக்குகளில் ஒன்றான பஜாஜ் பல்சர் 150 பைக் பல்வேறு அப்டேட்டுகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலை, அதன் அறிமுகத்திற்கு முன்னர் பரிசோதிக்கும் விதமாக இயக்கியுள்ளது. அவ்வாறு, பஜாஜ் பல்சர் 150 மாடல் பலபரீட்சையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ஸ்பை செய்யப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த ஸ்பை படங்களை நீங்கள் கீழே காணலாம்...

அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

இது, பல்சர் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. மேலும், வரும் காலங்களில் களமிறங்க காத்திருக்கும் இந்த புத்தம் புதிய பல்சர் 150 மாடலில் என்னவெல்லாம் புதிய அப்டேட்டை பஜாஜ் நிறுவனம் வழங்கியிருக்கின்றதோ என்ற ஏக்கத்தையும் அவர்கள் மத்தியில் இந்த ஸ்பை படங்கள் உண்டாக்கியுள்ளது. இதனைச் சற்று விளக்கும் வகையில், இந்த ஸ்பை புகைப்படத்தின் காட்சிகள் தற்போது உள்ளன.

அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

பஜாஜ் நிறுவனம், தற்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கும் பஜாஜ் பல்சர் 150 மாடல் பைக்கில் பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. அந்தவகையில், இந்த பைக்கில் ப்யூவல் இன்ஜெக்சன் சிஸ்டம் புதிதாக புகுத்தப்பட்டுள்ளது. இது, கூடிய விரைவில் அமலுக்குள்ளாக இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியில் தேர்ச்சி பெற உதவும். மேலும், முன்னதாக விற்பனையில் இருந்த சிவப்பு நிறத்தையும், அப்கமிங் பல்சர் 150 மாடலில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

இதனை உறுதி செய்யும் விதமாக, ஸ்பை செய்யப்பட்டிருக்கும் புகைப்படத்தில் சிவப்பு நிறத்திலான பஜாஜ் பல்சர் 150 மாடல் பைக் காட்சிக்குள்ளாகியுள்ளது. இதுமட்டுமின்றி, பஜாஜ் பல்சர் 150 பைக் சற்று ஸ்போர்ட் மாடல் பைக்காக காட்சியளிக்கும் வகையிலான மாற்றத்தையும் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், முன்பக்க பிரேக் லைன்கள், தங்க நிறத்திலான காலிபர்கள் மற்றும் ஃபோர்க்கில் ரெஃப்ளெக்டர்கள் இருக்கின்றன.

அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

மேற்கூரிய இந்த மாற்றங்களைத் தவிர வேறெந்த மாற்றங்களும், விரைவில் அறிமுகமாக காத்திருக்கும் பஜாஜ் பல்சர் 150 பைக்கில் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், புதிய பல்சர் பைக்கில் கணிசமான அப்டேட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பை இமேஜும் அதைத்தான் உறுதி செய்கின்றது. அந்தவகையில், இதற்கு முன்னதாக காணப்பட்ட அதே உடற்கூறுகள் அப்கமிங் பல்சர் 150 மாடலில் இடம் பெற்றுள்ளது.

அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

அவ்வாறு, பைக்கின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் கேஸ்-சார்ஜட் சாக் அப்சார்பர் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, இந்த பைக்கின் முன்பக்க வீலில் 260 மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 230 மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் கூடுதல் பாதுகாப்பு வசதியாக வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

அதேபோன்று, பல்சர் பைக்கின் முந்தைய தலைமுறை மாடலில் காணப்பட்ட அதே 149 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின்தான், இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 8,000 ஆர்பிஎம்மில் 14 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக்கின் டிரான்ஸ்மிஷன் வேலையை 5-ஸ்பீடு திறன் கொண்ட எஞ்ஜின்பாக்ஸ் பார்த்துக்கொள்ளகின்றது.

அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

பஜாஜ் நிறுவனம் இந்த புதிய பல்சர் 150 மாடலை மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஸ்டாண்டர்டு (முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக், பின்பக்கத்தில் டிரம் பிரேக்), ட்வின் டிஸ்க் (இரு பக்க வீலிலும் டிஸ்க் பிரேக்குகள்) மற்றும் நியான் ஆகிய மூன்று விதமான வேரியண்டில் இந்த பைக் விற்பனைக்கு வரவிருக்கின்றது.

அடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

இதில், ஸ்டாண்டர்டு வேரியண்ட் ரூ. 84,461 என்ற விலையிலும், ட்வின் டிஸ்க் வேரியண்ட் ரூ. 88,339 என்ற விலையிலும், நியான் வேரியண்ட் ரூ. 68,250 என்ற விலையிலும் விற்பைக்கு கிடைக்க இருக்கின்றது.

இவையனைத்தும், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். புதிய பல்சர் 150 பைக் விற்பனைக்கு களமிறங்கிய பின்னர் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டிவிஎஸ்ஸ அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பைக்குகளுக்கு கடுமையான சவாலை என வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: Zigwheels

More from DriveSpark

Article Published On: Wednesday, July 3, 2019, 16:09 [IST]
English summary
Bajaj Pulsar 150 Spied In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+