இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா?

பல்சர் 180எஃப் மோட்டார் சைக்கிள் மாடலில், ஏபிஎஸ் வசதியை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனத்தின் முதன்மையான மாடல்களில் ஒன்றாக இருந்து வந்தது பல்சர் 180 (Pulsar 180). ஆனால் பல்சர் 180 மோட்டார் சைக்கிள் விற்பனையில் இருந்து சமீபத்தில் விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் அதற்கு மாற்றாக பல்சர் 180எஃப் (Pulsar 180F) மோட்டார் சைக்கிளை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பல்சர் 180எஃப் பைக், கடந்த மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா?

ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, பல்சர் 180எஃப் மோட்டார் சைக்கிளில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS - Anti-lock Braking System) இடம்பெறவில்லை. முன்னதாக 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில்தான், ஏபிஎஸ் வசதி இல்லாமலேயே பல்சர் 180எஃப் மோட்டார் சைக்கிளை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது அதன் விலை 86,500 ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் பஜாஜ் நிறுவனம் தற்போது ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் பல்சர் 180எஃப் மோட்டார் சைக்கிளை அப்டேட் செய்துள்ளது.

இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா?

இதர பஜாஜ் நிறுவன மோட்டார் சைக்கிள்களை போல், பல்சர் 180எஃப் பைக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியைதான் பெற்றுள்ளது. இதன் காரணமாக பல்சர் 180எஃப் மோட்டார் சைக்கிளின் விலை சுமார் 7,800 ரூபாய் உயர்த்தப்பட்டு, 94,278 ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் கூட, இதுதான் தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மலிவான ஆஃப் ஃபேர்டு (Half Faired) மோட்டார் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா?

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தவிர, புதிய நியான் கலர் மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்ட அப்டேட்களையும் பல்சர் 180எஃப் மோட்டார் சைக்கிளில் பஜாஜ் நிறுவனம் செய்துள்ளது. 2019 பஜாஜ் பல்சர் 180எஃப் ஏபிஎஸ் பைக்கில், 178.6 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 4 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 17 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. பல்சர் 180எஃப் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா?

இதனிடையே பஜாஜ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1.05 லட்சம் பல்சர் சீரிஸ் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதில், பல்சர் 150 மாடலின் எண்ணிக்கை மட்டும் 83,228 என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல்சர் சீரிஸில் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற பெருமையை பல்சர் 150 பெறுகிறது. இதுதவிர ஒரே மாதத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிள்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் லைன் அப்பானது, 150, 160, 180, 200 மற்றும் 220 சிசி வேரியண்ட்களை உள்ளடக்கியதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2019, 17:39 [IST]
English summary
Bajaj Pulsar 180F ABS Price, Features. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+