புதிய பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!
கூடுதல் அம்சங்களுடன் பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் பல்சர் வரிசையில் அனைத்து பைக் மாடல்களும் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிக சிறப்புகளுடன் புதிய பஜாஜ் பல்சர் 180சிசி பைக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல்சர் வரிசையில் பவர்ஃபுல் மாடலாக இருக்கும் பல்சர் 220எஃப் பைக்கின் டிசைன் அம்சங்களுடன் இந்த புதிய பல்சர் 180சிசி பைக் வந்துள்ளது. இந்த புதிய மாடல் பல்சர் 180எஃப் நியான் எடிசன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பாக, பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கின் புரொஜெக்டர் ஹெட்லைட்டை அப்படியே இந்த பைக்கில் தூக்கி மாட்டியது போலவே இருக்கிறது. எனினும், இந்த பைக்கில் ஆரஞ்ச் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் மூலமாக சிறப்பு அந்தஸ்து கொண்ட மாடலாக வந்துள்ளது.
புதிய பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிசன் மாடலில் 178.6சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிசன் பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 260 மிமீ டிஸ்க்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க்கும் இடம்பெற்றுள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

முன்புறத்தில் சாதாரண வகை ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற ஷாக்அப்சார்பரை 5 விதமான நிலைகளில் மாற்றும் வசதியும் உள்ளது.
புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் நியான் எடிசன் பைக் ரூ.87,450 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட் விலை ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








