இந்தியாவை புரட்டி போட களமிறங்கும் புதிய யமஹா பைக்... விலை தெரிந்தால் இன்றே புக் செய்து விடுவீர்கள்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யமஹா பைக் ஒன்று, மிகவும் மலிவான விலையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் இன்றே 'புக்' செய்து விடக்கூடும்.

இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட்டில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று யமஹா. பெர்ஃபார்மென்ஸ் ரக பைக்குகளை விரும்பும் இந்தியாவின் இளம் வாடிக்கையாளர்கள் யமஹா நிறுவனத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

எனவே கேடிஎம், பஜாஜ் மற்றும் டிவிஎஸ் என போட்டிக்கு எந்த நிறுவனங்கள் வந்தாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவும் யமஹா மீதான நம்பிக்கையை தகர்க்க முடியவில்லை. தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள யமஹா பைக்குகளில் ஒன்று ஒய்இஸட்எப்-ஆர்15 வி3.0 (YZF-R15 V3.0).

YZF-R15 V3.0 பைக்கை அடிப்படையாக கொண்ட எம்டி-15 (MT-15) என்ற புத்தம் புதிய பைக்கை, இந்திய மார்க்கெட்டில் களமிறக்கும் பணிகளில் யமஹா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. YZF-R15 V3.0 பைக்கின் நேக்கட் வெர்ஷன்தான் (Naked Version) எம்டி-15.

தற்போது பல்வேறு சர்வதேச மார்க்கெட்களில், எம்டி-15 பைக்கை யமஹா விற்பனை செய்து கொண்டுள்ளது. எனவே இந்திய மார்க்கெட்டிலும் எம்டி-15 பைக் லான்ச் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வந்தது.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவிலும் எம்டி-15 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை யமஹா நிறுவனம் வெளியிட்டது. ஆனால் எம்டி-15 இங்கு எப்போது விற்பனைக்கு அறிமுகமாகும்? என்ற தகவல் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

தற்போது அந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யமஹா எம்டி-15 பைக், இந்திய மார்க்கெட்டில் வரும் மார்ச் 15ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள சூழலில், யமஹா எம்டி-15 பைக்கிற்கான முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். சர்வதேச மார்க்கெட்டிற்கான மாடலுடன் ஒப்பிடுகையில், இந்திய மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விலை மிகவும் குறைவாக இருக்க வேண்டும், போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்ற காரணங்களுக்காகதான் சர்வதேச மார்க்கெட்டிற்கான மாடலுடன் ஒப்பிடுகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

YZF-R15 V3.0 பைக்கில் இருக்கும் அதே 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு இன்ஜின்தான், எம்டி-15 பைக்கிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் YZF-R15 V3.0 பைக்கில், 19.2 பிஎச்பி பவர் மற்றும் 15 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

இதே பவர் அவுட்புட்தான் எம்டி-15 பைக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் YZF-R15 V3.0 பைக்கில் இருக்கும் அதே ஸ்லிப்பர் கிளட்ச் உடனான 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான், எம்டி-15 பைக்கிலும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

155சிசி இன்ஜின்தான் என்றாலும், பவர் மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில், பஜாஜ் பல்சர் 200 என்எஸ் (Bajaj Pulsar 200 NS), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (TVS Apache RTR 200 4V) உள்ளிட்ட பைக்குகளுடன், யமஹா எம்டி-15 பைக் போட்டியிடும்.

முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், முன் மற்றும் பின் என இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் என எம்டி-15 பைக்கில் யமஹா நிறுவனம் ஏராளமான வசதிகளை வழங்கவுள்ளது.

YZF-R15 V3.0 பைக்கின் ரைடிங் பொஷிசன் (Riding Position) ''அக்ரஸிவ்'' ஆக உள்ளது. இது டிராக் ரைடிங்கிற்கு மிகவும் உகந்தது. ஆனால் நீண்ட தூர மற்றும் தினசரி பயணங்களின்போது சோர்வு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகார்கள் உள்ளன.

எனவே எம்டி-15 பைக்கில், அந்த குறைகளை எல்லாம் நீக்கி, மிகவும் சௌகரியமான ரைடிங் பொஷிசனை யமஹா நிறுவனம் வழங்கவுள்ளது. எம்டி15 பைக்கின் விலை தொடர்பாக யமஹா நிறுவனம் இதுவரை எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மார்ச் 15ம் தேதிதான் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. என்றாலும் எம்டி 15 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 1.2 லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யமஹா YZF-R15 V3.0 பைக் தற்போது ரூ.1.28 லட்சம் முதல் ரூ.1.39 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைக்காட்டிலும் எம்டி 15 பைக்கின் விலை குறைவாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா எம்டி 15 பைக் மிகவும் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், பஜாஜ் பல்சர் 200 என்எஸ் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி உள்ளிட்ட பைக்குகளுக்கு கடும் போட்டி காத்திருக்கிறது என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








