ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

பஜாஜ் நிறுவனம், சந்தையில் நிலவி வரும் அட்வென்சர் டூரர் பைக்குகளுக்கான எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, அதன் பிரபல மாடலான பல்சர் பைக்கை அட்வென்சர் ரகத்தில் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

இந்தியா இளைஞர்கள் மத்தியில் அட்வென்சர் ரக பைக்குகளுக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவி வருகின்றது. இதன்காரணமாகவே, அண்மைக் காலங்களாகவே உள் மற்றும் வெளி நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அட்வென்சர் ரகத்திலான பைக்குகளை இந்திய மோட்டார் சைக்கிள் வாகனச் சந்தையில் தொடர்ச்சியாக களமிறக்கி வருகின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

அந்த வகையில், அண்மையில் இருசக்கர வாகன தயாரிப்பில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஹீரோ நிருவனம், அதன் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு அட்வென்சர் ரகத்திலான மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு களமிறக்கியது. மலிவு விலையில் களமிறங்கியதால், இந்த மோட்டார்சைக்கிள்மீது நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

இதற்கு முன்னதாக, பெனெல்லி நிறுவனம், அதன் டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு அட்வென்சர் ரக மோட்டார் சைக்கிள்களை அண்மையில் விற்பனைக்கு களமிறக்கியது. இதற்கான புக்கிங் அமோகமாக நடைபெற்று வந்தநிலையில், அந்த பைக்குகளின் டெலிவரி நேற்று (மே 15) தொடங்கியது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

இவ்வாறு, அட்வென்சர் பைக்குகளுக்கான எதிர்பார்ப்பு நீண்டு கொண்டே சென்றுக் கொண்டிருப்பதால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் அட்வென்சர் ரகத்திலான பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம், அதன் பிரபல மாடலான பல்சர் வரிசையில் அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், இந்த நிறுவனம் பல்சர் ஏஎஸ் 250 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

ஆனால், பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே பல்சர் வரிசையில் ஏஎஸ் 150 மற்றும் ஏஎஸ் 200 ஆகிய இரண்டு மாடல்களில் அட்வென்சர் ரகத்திலான மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்திருந்தது. இவை பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவர காரணத்தால், இதன் உற்பத்தி பின் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோட்டார்சைக்கிள்கள், பல்சரின் என்எஸ் 200 மாடலின் டிசைன் தாத்பரியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

இந்நிலையில்தான், பஜாஜ் நிருவனம் மீண்டும் அதன் பல்சர் வரிசையில், ஏஎஸ்250 அட்வென்சர் ரகத்திலான மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட இருக்கின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

ஏஎஸ் என்பது அட்வென்சர் ரகத்திலான வாகனம் என்பதை குறிக்கிறது. பல்சர் வரிசையில் அட்வென்சர் டூரர் ரக பைக் வரவிருப்பது, அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த வரிசையில் ட்யூவல் மாடல் அட்வென்சர் களமிறக்கப்படலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

பஜாஜ் நிறுவனத்தின்கீழ் வெளிவந்த பைக்குகளிலேயே, இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற மோட்டார்சைக்கிளாக பல்சர் இருக்கின்றது. ஆகையால், இதன் வரிசையில் கொண்டுவரப்படும் இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு நிலவும் என்ற நோக்கத்தில் இந்த புதிய ரகத்திலான அட்வென்சர் மாடல் பல்சர் பைக் வெளியிடப்பட உள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் இரு விதமான பயன்பாட்டிற்கு ஏற்ப, அதாவது ஆஃப் மற்றும் ஆன் ரோடு பயணத்திற்கு உகந்த டயர்கள் பொருத்தப்பட உள்ளன. இவை, அலாய் அல்லது ஸ்பீக்ஸ் வீல்களுடன் பொருத்தப்படலாம். அதேசமயம், இந்த மோட்டார்சைக்கிளில், தொழில்நுட்ப வசதிகளாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட உள்ளது. இது, வாகனத்தின் வேகம், ப்யூவல் லெவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்!

பாதுகாப்பு வசதியாக இந்த பைக்கில், டிஸ்க் பிரேக்குடன் கூடிய சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இணைக்கப்பட இருக்கின்றது. இத்துடன் இடை அழகான உருவத்தில் எல்இடி மின் விளக்குகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இதில் அதீத எனர்ஜியை வெளிப்படுத்தும் வகையில், 250 சிசி லிக்யூடு கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது அதிகபட்சமாக 30 ஹெச்பி பவரையும், 24 என்எம் டார்க்கையும் வழங்கும்.

Note: Images are representational purpose only.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2019, 10:38 [IST]
English summary
Bajaj Pulsar AS 250 Adventure Bike In The Works. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+