18 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

18 ஆண்டுகளை கடந்த பின்பும் கூட இந்திய மார்க்கெட்டில் பஜாஜ் பல்சர் பைக்கின் அலை ஓயாமல் வீசி கொண்டுள்ளது.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

இந்திய இளைஞர்களின் கனவு பைக்குகளில் ஒன்று பல்சர். இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிக பிரபலமான தயாரிப்பு இது. பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கடந்த 2001ம் ஆண்டு முதல் பல்சர் பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

இடையில் போட்டி நிறுவனங்கள் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தபோதும் கூட, பஜாஜ் பல்சர் இன்னமும் இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்ற மாடலாகதான் திகழ்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 84,154 பல்சர் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 150, 160, 180, 200 மற்றும் 220 சிசி மாடல்களை உள்ளடக்கிய பல்சர் சீரீஸின் விற்பனை நிலவரம் ஆகும்.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

மேற்கண்ட 5 மாடல்களில், எண்ட்ரி-லெவல் பல்சர் 150 சிசி வெர்ஷன்தான் (Pulsar 150) மிகவும் பிரபலமாக உள்ளது. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் விற்பனையான 84,154 பல்சர் பைக்குகளில், 150 சிசி வெர்ஷனின் எண்ணிக்கை மட்டும் 63,676 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே மாதம், அதாவது 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விற்பனையான பல்சர் 150 சிசி மாடல்களின் எண்ணிக்கை வெறும் 35,509 மட்டுமே.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

இதன்மூலம் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல்சர் 150 சிசி வெர்ஷன் பைக்குகளின் விற்பனை 79 சதவீதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வளர்ச்சி பஜாஜ் நிறுவனத்துடன் சேர்த்து, அதன் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 4வது மோட்டார் சைக்கிள் என்ற பெருமையையும் கடந்த மாதத்தில் பல்சர் 150 பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக, 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை (ABS- Anti-lock braking system) வழங்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

எனவே புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்பதற்காக, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய பல்சர் 150 மாடலின் ட்வின் டிஸ்க் வேரியண்ட்டை பஜாஜ் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. அதே நேரத்தில் பல்சர் 180 (Pulsar 180) மற்றும் என்எஸ் 200 (NS 200) மாடல்களின் ஒருங்கிணைந்த விற்பனை எண்ணிக்கையானது 14,758 ஆக உள்ளது.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளின் விற்பனை 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. பஜாஜ் நிறுவனம் சமீபத்தில், புதிய 180எஃப் மாடலுடன் (Pulsar 180F) பல்சர் 180 சீரீஸை விரிவாக்கம் செய்தது. பல்சர் 220 மாடலின் அதே டிசைன் தீம்தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இவ்விரு பைக்குகளிலும் இன்ஜின்கள் மட்டும் வெவ்வேறாக உள்ளன.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

இதனிடையே 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பஜாஜ் நிறுவனம் 5,720 பல்சர் 220 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 8,180 பல்சர் 220 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது பல்சர் 220 பைக்கின் விற்பனை 30 சதவீதம் குறைந்துள்ளது. விலை மலிவான பல்சர் 180எஃப் மாடலை அறிமுகம் செய்ததே இந்த சரிவிற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

இவ்விரு மாடல்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் சுமார் 14 ஆயிரம் ரூபாய். பஜாஜ் பல்சர் 180எஃப் பைக்கில், 178.6 சிசி, ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 17 பிஎஸ் பவர் மற்றும் 14.22 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளை கடந்தும் ஓயாமல் வீசும் பல்சர் அலை... ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல் இதுதான்...

முன்னதாக அப்டேட் செய்யப்பட்ட பல்சர் 220எஃப் (Pulsar 220F) ஏபிஎஸ் பைக்கானது, கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. விலை குறைவாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பெரும்பாலான பல்சர் மாடல்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன்தான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Bajaj Pulsar Bike Sales Report: 84,154 Units Sold In February 2019. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X