விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகளின் விற்பனை புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கின்றது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

கடந்த 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் பல்சர் 150 பைக் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.இரண்டு தசாப்தங்களை நெருங்கும் இவ்வேளையிலும், இந்த பைக்குகளின் விற்பனை ஸ்திரமாகவும், இதன் ரகத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

இந்த நிலையில், தற்போது பஜாஜ் பல்சர் பிராண்டில் பல்வேறு சிசி திறன்களில் மாடல்கள் வரிசை கட்டியுள்ளன. எனினும், 150சிசி மாடல்தான் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையான மாடலாகவும் இருக்கிறது.

விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் பல்சர் 150 பைக்கின் மொத்த விற்பனை ஒரு கோடியை தாண்டி சாதனை புரிந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் உள்நாட்டு விற்பனை ஒரு கோடி என்ற மாபெரும் இலக்கை எட்டியது.

விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

பல்சர் பிராண்டில் சராசரியாக மாதத்திற்கு 40,000 முதல் 60,000 பைக்குகள் விற்பனையாவது வாடிக்கை. ஆனால், இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதாவது, ஒரே மாதத்தில் ஒரு லட்சத்தை கடந்து பல்சர் பைக்குகளின் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது.

விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

பஜாஜ் பல்சர் பைக்கின் மார்ச் மாத உள்நாட்டு விற்பனையில் 39 சதவீதம் ஏற்றம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை தரும் விஷயமாக அமைந்துள்ளது.

விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

ஏனெனில், இந்த 150சிசி முதல் 160சிசி வரையிலான ரகத்தில் ஏராளமான பைக் மாடல்கள் வரிசை கட்டிவிட்டன. மேலும், பல புதிய வரவுகளும் பஜாஜ் பல்சர் வரிசைக்கு பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால், சந்தைப் போட்டியை விஞ்சி, இந்த புதிய விற்பனை சாதனையை பஜாஜ் பல்சர் பைக்குகள் பெற்றிருக்கின்றன.

விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

பஜாஜ் பல்சர் வரிசையில் பல்சர் 150, 150 நியான், 150 ட்வின் டிஸ்க் பிரேக், 180, 180 நியான், 220எஃப், என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 ஆகிய பல்வேறு மாடல்கள் விற்பனையில் உள்ளன. பல்சர் பைக்குகள் ரூ.64,998 முதல் ரூ.1,39,386 வரையிலான விலையில் கிடைக்கிறது.

விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

இதில், 150சிசி மாடல்தான் விற்பனையில் முதன்மையாக உள்ளது. டிசைன், செயல்திறன் மற்றும் சரியான விலையில் கிடைப்பதுதான் போட்டியாளர்களை விஞ்சி பல்சர் வரிசை பைக்குகள் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மை வகிப்பதற்கான முக்கிய காரணங்களாக கூறலாம்.

விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!

இந்தியாவின் வெற்றிகரமான பைக் பிராண்டாக விளங்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள் ஏராளமான வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. துருக்கி, ரஷ்யா, போர்ச்சுகல், கோஸ்டா ரிக்கா, சவூதி அரேபியா, மெக்சிகோ, அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2019, 13:30 [IST]
English summary
The Bajaj Pulsar range bikes has crossed the 1 lakh sales milestone in the domestic market in March.
மேலும்... #பஜாஜ் ஆட்டோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+