பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

பஜாஜ் நிறுவனம் பல்சர் வரிசையில் புதிய மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, அதன் புத்தம் புதிய மாடல் பல்சர் என்எஸ் 125 பைக்கை கடந்த ஆண்டு போலந்து நாட்டில் அறிமுகம் செய்தது.

இதனை, அந்நாட்டு பிஎல்என் மதிப்பில் 7,999 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது, இந்திய மதிப்பில் ரூ. 1.60 லட்சமாகும். பின்னர், பஜாஜ் நிறுவனம், கொலம்பியா உள்ளிட்ட சில நாடுகளிலும், பல்சர் என்எஸ்125 பைக்கை விற்பனைக்கு களமிறக்கியது. ஆனால், இந்தியாவில் மட்டும் இந்த பைக் நீண்ட இழுபறியைச் சந்தித்து வருகின்றது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் பல்சர் என்எஸ் 125 மாடலை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேசமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை பஜாஜ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அதேசமயம், பல்சர் என்எஸ்125 மாடலின் அறிமுகம் குறித்த தகவலை இன்னும் சில நாட்களில் அது தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வரிசை மாடலுக்கு இந்தியாவில், எப்போதும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அதிலும், கடந்த சில மாதங்களாக அது நல்ல வளர்ச்சியை சந்தித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், பஜாஜ் பல்சர் 125 சிசி பைக் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்குமேயானால், அது நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெறும் என கூறப்படுகின்றது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

அதேசமயம், 125சிசி வரிசையில் பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடலுக்கு இந்தியாவில் போட்டியாக வேறு மாடல் இல்லாத காரணத்தால், அது நல்ல டிமாண்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

பல்சரின் இந்த 125சிசி பைக்கின் வருகையை உறுதி செய்யும்வகையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரி ராகேஷ் ஷர்மா, சிஎன்பிசி டிவி18 இடம் கூறியதாவது, "பஜாஜ் நிறுவனம் 125சிசி வரிசையில் களமிறங்கும் விதமாக புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை ஆகஸ்ட் மாதத்திற்குள் களமிறக்க உள்ளது" என்றார். முன்னதாக, ராஜீவ் பஜாஜும் இதேத் தகவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

புதிய பல்சர் என்எஸ் 125 மாடல் அதன் பல்சர் என்ஸ் மாடல்களைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், அதன் சகோதர மடால்களில் உள்ள சிறப்பம்சங்கள் சிலவற்றை என்எஸ் 125 மாடலும் பெற்றிருக்கின்றது. அதேசமயம், இது புதிய பாடி லுக், வண்ணத் தேர்வு மற்றும் கிராஃபிக் டிசைன்களையும் பெற்றிருக்கின்றது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

அந்தவகையில், பல்சர் என்எஸ் 125 மாடலில், மேட் பினிஸ்ட்டிலான எக்சாஸ்ட் சிஸ்டம் மஃப்ளர், ட்யூவல் டோன் கலர் பாடி மற்றும் ஸ்பிளிட் டைப்பிலான இருக்கைகள் மற்றும் அகலமான டயர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த பைக்கின் எஞ்ஜினிற்கு சிறிய ரகத்திலான எஞ்ஜின் கவுல் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

இத்தகைய சிறப்பான நடவடிக்கையால், பஜாஜ் பல்சர் என்எஸ் 125 பைக் பார்ப்பதற்கு ஸ்போர்ட்ஸ் வாகனத்தைப் போன்று காட்சியளிக்கின்றது. மேலும், இந்த பைக்கின் ப்யூவல் டேங்க்கிற்கு, அதன் மூதாதையர்களான என்எஸ் 160 மற்றும் என்எஸ்200 மாடல்களில் இருப்பதைப்போன்று டேங்க் ஷ்ரவுட்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது பைக்கின் ஸ்போர்ட் லுக்கிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் காட்சியளிக்கின்றது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

இதைத்தொடர்ந்து, மேலும் முக்கியமான தோற்றமாக என்எஸ் 125 பைக்கின் ஹெட்லேம்ப் இருக்கின்றது. இதனை, அண்மையில் விற்பனையில் இருந்து பின்வாங்கப்பட்ட பல்சர் 135எல்எஸ் மாடலில் இருந்து அது பெற்றிருக்கின்றது. இந்த ஷார்ப்பான ஹெட்லேம்ப்புடன், உயர்ந்த வின்ட் ஸ்கிரீன் மற்றும் நடுத்தர டிஜிட்டல் தரம் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

பஜாஜ் நிறுவனம், இந்த பல்சர் 125 மாடலை நான்கு விதமான வண்ணத் தேர்வில் விற்பனை செய்ய இருக்கின்றது. அந்தவகையில், கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் பல்சர் என்எஸ் 125 பைக் கிடைக்க இருக்கின்றது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

பைக்கின் சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக அதன் முன்பக்கத்தில் 240மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 130மிமீ அளவு கொண்ட டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த பைக்கில் காம்பி பிரேக்கிங் வசதி எனப்படும் சிபிஎஸ் இடம் பெற இருக்கின்றது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

மேலும், வாகன ஓட்டியின் சிறந்த சஸ்பென்ஷன் சிஸ்டத்திற்காக பைக்கின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் சைட் நைட்ரக்ஸ் சாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல்சர் வரிசையில் அறிமுகமாகும் புதிய மாடல் இதுதான்... அறிமுகம் குறித்த சிறப்பு தகவல்...!

இத்துடன், சிறப்பான எஞ்ஜின் திறனுக்காக 124.45 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 12 பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 11 என்எம் டார்க் திறனை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இத்துடன் இந்த எஞ்ஜினில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இந்தியாவில் ரூ. 60 ஆயிரம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2019, 18:16 [IST]
English summary
Bajaj Pulsar NS 125 Launch In India Scheduled For Next Month. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+