ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்.. ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே!

கேடிஎம் ட்யூக் 125 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய பல்சர் மாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்... ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே..!

பஜாஜ் நிறுவனம், பல்வேறு மோட்டார்சைக்கிள்களை இருசக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்து வந்தாலும், அந்த நிறுவனத்தின் பல்சருக்கு தான் இளைஞர்கள் மத்தியில் அதிக மவுசு நிலவி வருகிறது. அந்த வகையில், இதன் ஸ்டைல் மற்றும் லுக், எஞ்ஜின் தரம் ஆகியவை இளைஞர்களைக் கவரும் விதத்தில் இருக்கின்றது.

ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்... ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே..!

ஆகையால், இளைஞர்களின் மன நிலையை அறிந்த பஜாஜ் நிறுவனம் பல்சர் வரிசையில், கணிசமான மாடல்களை உருவாக்கி சந்தையில் அறிமகும் செய்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் பல்சர் 180எஃப் மாடலை அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது, பல்சர் 125என்எஸ் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய முயற்சியில் பஜாஜ் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ரஷ்லேன் இணையதளம் வெளியிட்டுள்ளது.

ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்... ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே..!

சமீபத்தில் தான் பஜாஜ் நிறுவனம் அதன் கான்செப்ட் மாடலான பல்சர் 250 மாடலை தயாரித்து வருவதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு புதிய பல்சர் 125என்எஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்... ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே..!

இந்த புதிய பல்சர் 125என்எஸ் மாடல் ஏற்கனவே போலந்து நாட்டில் படுஜோராக விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோட்டார்சைக்கிளில் பாதுகாப்பு விதிக்கேற்ப சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்... ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே..!

கேடிஎம் ட்யூக்125 மாடலுக்கு போட்டியாக களமிறங்க இருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில், ட்யூக் 125-இல் உள்ள அதே எஞ்ஜின் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆகையால், இந்த பல்சர் 125என்எஸ் மாடலில் 124.5சிசி கொண்ட ஏர்-கூல்ட், சிங்கிள் சிலிண்டர், டிடிஎஸ்-ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 12 பிஎஸ் பவரை 8,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 11 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்... ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே..!

பிஎஸ்-VI தரத்திற்கு உருவாகி இருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் ட்வின் சைட் நைட்ரோக் சாக் அப்சார்பரைப் பின் பக்கத்திலும், முன் பக்கத்தில் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 240mm டிஸ்க் பிரேக் முன்பக்க வீலிலும், பின்பக்க வீலில் 130mm டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்... ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே..!

இந்த புதிய பல்சர் 125 என்எஸ் கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த மோட்டார்சைக்கிளின் துள்ளியமான வெளியீட்டு தேதி குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை. ஆனாலும், இந்த புதிய பல்சர் இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்... ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே..!

பல்சர் 125என்எஸ் மாடல் மோட்டார்சைக்கிள், அதைவிட சக்தி வாய்ந்த 135எல்எஸ் மாடலைக் காட்டிலும் சற்று அதிகமான விலையைப் பெறலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால், புதிதாக களமிறங்கும் இந்த 125என்எஸ் பைக்கில் புதிதாக அமலாகி இருக்கும் பாதுகாப்பு அம்சம் மற்றும் மாசு உமிழ்வு கட்டுப்பாட்டு ஆகிய விதிகளுக்கு ஏற்ப உருவாக்கியிருப்பதால் இந்த விலை உயர்வு வரும் என கூறப்படுகிறது.

ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்... ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே..!

அவ்வாறு இந்த மோட்டார்சைக்கிள் எக்ஸ்-ஷோரூமில் ரூ. 84 ஆயிரம் விலையில் வரும் என எதிர்பார்க்கலாம். அதேசமயம் இந்த மோட்டார்சைக்கிளை உள்நாட்டில் உற்பத்தி செய்து விற்றால் ரூ. 65 முதல் 75 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2019, 11:08 [IST]
English summary
Exclusive! Bajaj Pulsar NS125 CBS Launch In India By Third Quarter. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+