இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

பல்சர் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் விஷயம் வெகு விரைவில் நிறைவேறப்போகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக் சிஸ்டம் (CBS - Combi-Brake System) கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS - Anti-lock Braking System) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. அத்துடன் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கும் வந்து விட்டது. எனவே விதிமுறைப்படி சிபிஎஸ், ஏபிஎஸ் இல்லாத இரு சக்கர வாகனங்களை இனிமேல் இந்தியாவில் உற்பத்தி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது.

இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

எனவே கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் தங்கள் மாடல்களில், மத்திய அரசின் உத்தரவிற்கு ஏற்ப சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டங்களை வழங்கி விட்டன. ஆனால் இன்னும் ஒரு சில பிராண்டுகள் மட்டும் இந்த அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளன. இதில், பஜாஜ் நிறுவனமும் ஒன்று. அவென்ஜர் மற்றும் பல்சர் ரேஞ்ச் உள்பட பஜாஜ் நிறுவனம் தனது அனைத்து மாடல்களையும் மத்திய அரசின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்து விட்டது.

இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

ஆனால் பல்சர் என்எஸ்160 (Bajaj Pulsar NS160) குறித்த அறிவிப்பு மட்டும் தற்போது வரை வெளியாகவில்லை. பஜாஜ் பல்சர் என்எஸ்160 மோட்டார் சைக்கிள் அதன் செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக திகழ்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அத்துடன் இந்திய மார்க்கெட்டில் அதற்கு நல்ல டிமாண்ட்டும் உள்ளது.

இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

ஆனாலும் கூட இன்னும் ஏபிஎஸ் வசதி வழங்கப்படாமல் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தரும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், பல்சர் என்எஸ்160 மோட்டார் சைக்கிளில் ஏபிஎஸ் வசதியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

பல்சர் என்எஸ்160 பைக்கின் ஏபிஎஸ் வேரியண்ட்டை இந்தியாவில் களமிறக்கும் பணிகளை பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில பஜாஜ் டீலர்ஷிப்கள் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பல்சர் என்எஸ்160 பைக் விரைவில் ஷோரூம்களை வந்தடையும் என எதிர்பார்க்கலாம்.

இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்கில், 160.3 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 15.5 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

இதன் முன் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சிய பல்சர் ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்களை போல், என்எஸ்160 பைக்கிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்எஸ்200 பைக்கில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியை அறிமுகம் செய்தபோது பஜாஜ் நிறுவனம் அதன் விலையை கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது.

இதுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தது இதற்குதான்... பல்சரில் ரகசியமாக மாற்றத்தை தொடங்கிய பஜாஜ்...

ஆனால் இந்த அளவிற்கான விலை உயர்வு என்எஸ்160 பைக்கில் இருக்காது என எதிர்பார்க்கலாம். அதாவது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்படுவதன் காரணமாக பல்சர் என்எஸ்160 பைக்கின் விலை ஓரளவிற்கு மட்டுமே உயர்த்தப்படும். தற்போதைய நிலையில் பஜாஜ் பல்சர் என்எஸ்160 மோட்டார் சைக்கிள் ரூ.85,939 என்ற டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பல்சர் என்எஸ்160 மோட்டார் சைக்கிளின் டெலிவரி வெகு விரைவில் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 21, 2019, 8:30 [IST]
English summary
Bajaj Pulsar NS160 ABS Launch Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+