அட்டகாசமான புதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்!
சந்தைப் போட்டி மிகுதியால் வாடிக்கையாளர்களை வளைக்கும் விதமாக அவ்வப்போது புதிய அம்சங்களுடன் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
புதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வடிவமைப்பு, சிறந்த எஞ்சின் மற்றும் சரியான விலையில் கிடைக்ககும் மாடலாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. கடந்த 2012ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடலுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது.

எனினும், சந்தைப் போட்டி மிகுதியால் வாடிக்கையாளர்களை வளைக்கும் விதமாக அவ்வப்போது புதிய அம்சங்களுடன் இந்த பைக் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மஞ்சள் வண்ணத்தில் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் கவுல், எஞ்சின் கார்டு உள்ளிட்டவை மஞ்சள் வண்ணத்திலும், பிற பாகங்கள் கருப்பு வண்ணத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த பைக்கின் சக்கரங்களின் ரிம்மில் மஞ்சள் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கவரும் வகையில் உள்ளது. அடுத்து, பெட்ரோல் டேங்க் கவுல்கள், முன்புற மட்கார்டு, பின்புற ஃபென்டர் ஆகிய பகுதிகளில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினிய பாகங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த மஞ்சள் வண்ண பல்சர் என்எஸ்200 பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும். ஏற்கனவே மஞ்சள் வண்ணத்தில் கிடைத்த நிலையில், இந்த வண்ணம் விலக்கப்பட்டது. தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் 199சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 23.2 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 280 மிமி டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

புதிய மஞ்சள் வண்ண பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் ரூ.1.11 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். விலையில் மாற்றம் இல்லை.

அடுத்த வாரம் முதல் பஜாஜ் டீலர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, யமஹா எஃப்இசட் 25 ஆகிய மாடல்களுடன் போட்டி போடுகிறது.
Source: Thrustzone.com


Click it and Unblock the Notifications








