பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டை விரிவாக்கம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டம்?

தனது பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டை விரிவாக்கம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டை விரிவாக்கம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டம்?

இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் மஹாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஸாக்கள் உள்ளிட்டவற்றை பஜாஜ் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இதில், இரு சக்கர வாகனங்கள் என எடுத்து கொண்டால், பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர், டோமினார், அவென்ஜர் உள்ளிட்ட மாடல்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாக திகழ்கின்றன.

பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டை விரிவாக்கம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டம்?

இந்த சூழலில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பஜாஜ் நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட் 45 சதவீத வளர்ச்சியை சந்தித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பஜாஜ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட் கணிசமான வளர்ச்சியை சந்தித்திருப்பதால் பஜாஜ் நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது.

பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டை விரிவாக்கம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டம்?

எனவே தனது பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டை விரிவாக்கம் செய்ய பஜாஜ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து CNBCTV18.com செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பணிகளில் பஜாஜ் நிறுவனம் கவனம் செலுத்த தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வரும் காலங்களில் பஜாஜ் நிறுவனத்தின் பிரீமியம் செக்மெண்ட் பல்வேறு புதிய தயாரிப்புகளை காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டை விரிவாக்கம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டம்?

இனி பஜாஜ் நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார் சைக்கிள்களுக்கு வருவோம். டோமினார் 400 பைக்கின் 2019 எடிசனை (2019 Dominar 400) பஜாஜ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விலை 1.73 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் விலை சற்று கூடியிருந்தாலும் கூட, அதற்கு ஏற்ப பல்வேறு அசத்தலான அப்டேட்களை பஜாஜ் நிறுவனம் செய்துள்ளது.

பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டை விரிவாக்கம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டம்?

இதன்படி வழக்கமான முன்பகுதி ஃபோர்க்குகள் மாற்றப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக சிறப்பான ஸ்திரத்தன்மையை மனதில் வைத்து அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் எரிபொருள் டேங்க்கின் மீது இருந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளேவும் மாற்றப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள புதிய அமைப்பு பல்வேறு கூடுதல் தகவல்களை வழங்குகிறது.

பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டை விரிவாக்கம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டம்?

2019 பஜாஜ் டோமினார் 400 பைக்கின் முக்கியமான ஹைலைட்டே அதன் இன்ஜின்தான். பஜாஜ் டோமினார் 400 பைக்கின் தற்போதைய இன்ஜின் 40 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பகுதியில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் 2019 பஜாஜ் டோமினார் 400 மோட்டார் சைக்கிளில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Bajaj To Expand Premium Bike Segment. Read in Tamil
Story first published: Monday, April 8, 2019, 18:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X