பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

பஜாஜ் - டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் முதல் மோட்டார்சைக்கிள் குறித்த சிறப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

இங்கிலாந்து (UK) நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டிரையம்ப் நிறுவனம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து பைக்குகளைத் தயாரிக்க இருப்பதாக கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவித்திருந்தது.

அதன்படி, இந்த குளோபல் பார்டனர்ஷிப்புடன் இணைந்து பஜாஜ் நிறுவனம், இந்தியாவில் நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய இருசக்கர வாகனங்களை களமிறக்க திட்டமிட்டு வருகின்றது.

பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே, ஆஸ்திரியா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து, மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் களமிறக்கி வருகிறது.

இந்நிலையில், பஜாஜ் மீண்டும் ஓர் புதிய கூட்டணியை அமைத்து இந்தியச் சந்தையில், புதிய ரகத்திலான மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

அந்தவகையில், பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில், மிட்-கெபாசிட்டி ரகத்திலான மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள், அண்மையில் வெளிவந்த ஆர்இ 650 ட்வின் மாடலை ஒத்ததாக இருக்கும் என உறுதிச் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

முன்னதாக கேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச தரத்திலான பைக்குகளை விற்பனைச் செய்துவதன்மூலம், பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2016ம் ஆண்டில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் இரண்டாவது இடத்தை பஜாஜ் - கேடிஎம் கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தகுந்தது.

பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

இந்த நிலையில், டிரையம்ப் நிறுவனத்துடன் புதிய ரகத்திலான பைக்குகளை வெளியிட இருப்பது, நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றி வாய்ப்பையே ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த இணைப்பின் கடைசி ஒப்பந்தத்திற்கான கையொப்பம் இந்த ஆண்டிற்குள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

இந்த இணைப்பின் மூலம் முதலில் மிட்-கெபாசிட்டி ரகத்திலான மோட்டார்சைக்கிள்கள் உருவாக இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் உற்பத்திக்கான அனைத்து பணிகளையும் இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள உள்ளன. அந்தவகையில், தரம், செலவு, டிஸ்டிரிபியூசன் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள உள்ளன.

பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

அதேசமயம், இந்த மோட்டார்சைக்கிளின் உற்பத்தியானது பஜாஜின் சக்கன் பிளாண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. உள்நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்வதால் இந்த பைக் நியாயமான விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

டிரையம்ப் நிறுவனம், இந்த பைக்கிற்கான இன்ஜினியரிங் டிசைனிங்கை மேற்கொள்ள இருக்கின்றது. அதனை பஜாஜ் நிறுவனம் கையாளும். அந்தவகையில், உள்நாட்டுச் சந்தைக்கு ஏற்றவாறு, ஹார்லி டேவிட்சன் மற்றும் ராயல்என்பீல்டு உள்ளிட்ட பைக்குகளுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் வகையில் இந்த புதிய பைக் உருவாக இருக்கின்றது.

பஜாஜ், டிரையம்ப் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக்: சிறப்பு தகவல்...!

இந்த இரு நிறுவனங்களின் இணைப்பில் தயாராக இருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் அடுத்த வருடத்திற்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அறிமுகமாக காத்திருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் 500சிசி திறனுடையதாக இருக்கலாம். இது, 2.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் களமிறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இவை உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது.

Source: gaadiwaadi

Note: Images for representation purpose only.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2019, 12:24 [IST]
English summary
Bajaj-Triumph Partnership Developing Mid-Capacity Motorcycles. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+