துடிப்பான ஸ்டைல்.. கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்: எதுனு தெரிஞ்சா ஆச்சரியபடுவீங்க!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த இரு மாடல்களை ஸ்பெஷல் எடிசனாக தயார் செய்து கொலம்பியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, இந்தியா மட்டுமின்றி சில உலக நாடுகளுகளிலும் அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், அதன் பிரபலமான பல்சர் என்எஸ் 200 மாடலின் லிமிடெட் எடிசனை கொலம்பியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இத்துடன், என்எஸ் 160 மாடலின் லிமிடெட் எடிசனையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

இந்த இரு மாடல் பைக்குகளையும் அந்நிறுவனம், 'பல்சர் மேனியா' என்ற பெயரில் அங்கு அறிமுகம் செய்கின்றது.

இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகளும், கார்ப் மற்றும் எஃப்ஐ ஆகிய இரு வெர்ஷன்களில் கொலம்பியாவில் கிடைக்க இருக்கின்றது. இதில், கார்ப் வெர்ஷன் பைக், இந்திய மதிப்பில் ரூ. 1.7 லட்சம் என்ற விலையிலும், எஃப் ஐ வேரியண்ட் ரூ. 2.05 லட்சம் என்ற விலையிலும் அங்கு விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளன.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவின் பல்சர் என்எஸ் 200 மாடலுக்கும், தற்போது கொலம்பியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல்சர் என்எஸ் 200 லிமிடெட் எடிசன் மாடலுக்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை என கூறப்படுகின்றது. அதேசமயம், இரு மாடல்களுக்கும் இடையே சிறு சிறு மாற்றங்களாக காஸ்மெடிக் மற்றும் வண்ண மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆகையால், இந்திய மற்றும் கொலம்பிய ஆகிய இரு நாட்டின் மாடல்களிலும் ஒரே திறன் கொண்ட எஞ்ஜின்தான் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

அதேசமயம், காஸ்மெடிக் அப்டேட்டாக, கொலம்பியா பல்சர் என்எஸ் 200 லிமிடெட் எடிசன் பைக்கில், பல்வேறு புதிய டிகேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

அதிலும், மிக முக்கியமாக ஹெட்லேம்ப், ப்யூவல் டேங்க் மற்றும் ரியர் பேனல் உள்ளிட்ட பகுதிகளில் 'பல்சர் மேனியா' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதேமாற்றம்தான், என்எஸ் 200 மாடலை அடுத்து களமிறங்கும் என்எஸ் 160 மாடலிலும் இடம்பெற்றுள்ளது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், லிமிடெட் எடிசன் பல்சரில் க்னக்கிள் குவார்ட், க்ராஷ் குவார்ட் மற்றும் ப்யூவல் டேங்க் பகுதியில் ரப்பர் பேட்கள் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் ஸ்டாண்டர்டு மாடலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

அதேபோன்று, இந்த பைக்ககளுக்கு புத்தம் புதிய வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நியான் மஞ்சள், சில்வர் கருப்பு உள்ளிட்ட நிறங்களால் அந்த பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஜாஜ் நிறுவனம், இந்த பல்சர் என்எஸ் 200 லிமிடெட் எடிசன் மாடல் பைக்கில் 199.2 சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

அது, 4 வால்வ், எஸ்ஓஎச்சி, லிக்யூடு கூல்ட், டிரிபிள் ஸ்பார்க் டிடிஎஸ்-ஐ அம்சத்தைப் பெற்றுள்ளது. இது 23.5 பிஎஸ் பவரை 9,500 ஆர்பிஎம்மிலும், 18.3 என்எம் டார்க்கை 8,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

அதேபோன்று, என்எஸ் 200 மாடலை அடுத்து களமிறங்கும் என்எஸ் 160 மாடலில், 160.3 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுவும், 4 வால்வ், எஸ்ஓஎச்சி, லிக்யூடு கூல்ட், டிரிபிள் ஸ்பார்க் டிடிஎஸ்-ஐ அம்சத்தைப் பெற்றிருக்கின்றது. ஆனால், இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக, 15.5 பிஎஸ் பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 14.6 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இதில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

மேலும், இந்த இரு மாடல்களுக்கும் ஒரே மாதிரியான சஸ்பென்ஷன் அமைப்புதான் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பைக்கின் முன்பக்கத்தில் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோ சாக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

இத்துடன் சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக, பைக்கின் முன்பக்க வீலில் 240 மிமீ அளவு கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்க வீலில் 230 மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், என்எஸ் 200 மாடலில் இது மாறுபட்டு காணப்படகின்றது.

அந்தவகையில், அந்த பைக்கின் முன்பக்க வீலில் 300 மிமீ டிஸ்க்கும், பின்பக்க வீலில் 230மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.

துடிப்பான ஸ்டைல்... கொலம்பியாவில் களமிறங்கிய நம்ம ஊர் தயாரிப்பு பைக்... எதுனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

இந்த ஸ்பெஷல் எடிசன் என்எஸ் மாடல் பல்சர் பைக் இந்தியாவில் அறிமுகமாவது கேள்வி குறியாக இருக்கின்றது. பொதுவாக, பஜாஜ் நிறுவனம், ஸ்பெஷல் எடிசன் மாடல் பைக்குகளை முதலில் வெளிநாடுகளிலேயே களமிறக்கும். பின்னரே, நீண்ட நாள் இடைவெளிவிட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யும். அந்தவகையில் பார்த்தால், இந்த பைக் சில வருடங்கள் கழித்து களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Unveiled Pulsar NS200 & NS160 Special Edition In Colombia. Read In Tamil.
Story first published: Wednesday, July 24, 2019, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X