விரைவில் வரும் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் சாலை சோதனைகளில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மீண்டும் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த முறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக சந்தையில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, அர்பனைட் என்ற பிராண்டில் மின்சார இருசக்கர, மூன்றுசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அர்பனைட் பிராண்டில் முதலாவதாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஸ்கூட்டர் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தற்போது த்ரஸ்ட் ஸோன் வெளியிட்டு இருக்கும் புதிய ஸ்பை படங்களில் இந்த ஸ்கூட்டர் முழுமையாக அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனஐ ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும், ஒட்டுமொத்த டிசைன் அம்சங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை கிராப் ரெயில் அமைப்பு உள்ளது. மேலும், புகைப்போக்கி அமைப்பு இல்லாததால், இது நிச்சயம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வருவது உறுதியாகி இருக்கிறது.
இந்தத ஸ்கூட்டரில் முழுமையான எல்இடி லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது. முன்புறத்தில் ஒற்றை பக்க ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு, பின்பறத்தில் மோனோஷாக் அப்சார்பர், 12 அங்குல அலாய் வீல்கள், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆகியவை காண முடிகிறது.

புதிய பஜாஜ் அர்பனைட் மின்சார ஸ்கூட்டரில் சுவிட்சுகளில் ஒளி உமிழ் வசதியுடன் வர இருக்கிறது. இதனால், இரவிலும் சுவிட்சுகளை தெளிவாக பார்த்து இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், இந்த புதிய ஸ்கூட்டர் தயாரிப்பு நிலை மாடலுக்குரிய அம்சங்கள பெற்றிருக்கிறது.

புதிய பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வசதியான இருக்கைகளுடன் மிக பிரம்மாண்டமாகவே தோற்றமளிக்கிறது. எனவே, இது இருபாலரும் பயன்படுத்தும் சிறப்பம்சங்களுடன் வர இருப்பதையும் உறுதிசெய்து கொள்ள முடியும்.
இந்த ஆண்டு பண்டிகை காலத்தின்போதே இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் நம்புகின்றன. அர்பனைட் பிராண்டில் இந்த ஸ்கூட்டர் மட்டுமின்றி, மூன்றுசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களை கொண்டு வருவதற்கும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Source: Thrustzone


Click it and Unblock the Notifications








