ஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..!!

ஆந்திர மாநிலத்தில் மக்கள் உயிரினை காக்கும் ஆம்புலன்ஸாக பஜாஜ் வி15 பைக் மாறியுள்ளது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் பஜாஜ் அவென்ஜர் ஆம்புலன்ஸை அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் பஜாஜ் வி15 பைக் ஆம்புலன்ஸை அறிமுகம் செய்துள்ளது.

ஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..!!

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. விபத்துக்களின் காரணமாக, இந்திய சாலைகளில் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

ஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..!!

எனவே சாலை விபத்துக்களினால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று உருவெடுத்து நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..!!

இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கிய நபர்களுக்கு, உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ், மருத்துவ சிகிச்சை கிடைப்பது இல்லை. சாலை விபத்துக்களில் சிக்கி போராடி கொண்டிருக்கும் நபர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் பட்சத்தில், அவர்களது உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

ஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..!!

ஆங்கிலத்தில் இதனை 'கோல்டன் ஹவர்' என குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் வெகுவாக நிலவி கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் கூட, சாலை விபத்துக்களில் சிக்கிய நபர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை தடை செய்து விடுகிறது.

ஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..!!

விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நபர்களை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள், சில சமயங்களில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருப்பதை, நம்மில் அனைவரும் கண் கூடாக பார்த்திருக்க முடியும்.

ஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..!!

உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாக இந்திய சாலைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை. இதனால் தேவையற்ற குழப்பம் உண்டாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.

இந்த சூழலில் ஆந்திர மாநிலத்தில் பஜாஜ் வி15 பைக்குடன் ஒரு நோயாளி அமரும் வகையில் ரெக்லைன் சீட் பொருத்தப்பட்ட பாக்ஸ் போன்ற ஒன்று பைக்கின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு நோயாளி சாய்வாக படுத்துக்கொள்ளும் வகையிலும், நோயாளி படுத்தவுடன் கதவு சாத்தி கொள்ளும் வகையில் தானியங்கி கதவு அமைந்துள்ளது. இதனால் சாலைகளில் எளிதாக கடந்து மருத்துவமனை அடைய இந்த பஜாஜ் வி15 ஆம்புலன்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

ஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..!!

கர்நாடக அரசு ஏற்கனவே ஆம்புலன்ஸ் வருவதற்கு முன் முதலுதவி செய்யும் வகையில் மருந்து பொருட்களை சுமந்து செல்லும் பைக் ஆம்புலன்ஸை கடந்த வருடம் அறிமுகம் செய்தது.

ஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..!!

இதற்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கர்நாடக அம்பலன்ஸாக பஜாஜ் அவென்ஜர் பைக் பயன்படுவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பஜாஜ் வி15 பைக் மக்கள் உயிரினை காக்கும் ஆம்புலன்ஸாக ஆந்திராவில் மாறியுள்ளது.

Most Read Articles
English summary
Bajaj V15 Ambilace In Andhra: Read More in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X