அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

இந்திய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான பேட்டரி, தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விழாகால அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. எளிய மாத தவணை மற்றும் பணம் தள்ளுபடி போன்றவை பேட்டரி நிறுவனத்தின் இந்த சலுகையில் இடம் பெற்றுள்ளன.

அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

பைன் லேப்ஸ் மற்றும் பேடிஎம் நிறுவனங்களுடன் இணைந்து பேட்டரி நிறுவனம் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இதில் பேடிஎம் மூலம் ஸ்கூட்டர் வாங்குபவர்கள் ரூபாய் 8,000 வரை பணம் தள்ளுபடியை பெறலாம்.

அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

இந்த பணம் மாற்றத்தின் தேர்வுகளை ஸ்கூட்டர் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் அறிய நேரடியாக டீலர்ஷிப்களை அணுகலாம். எளிய மாத தவணைகள், பைன் லேப்ஸ்களின் டெபிட் கார்ட் மற்றும் க்ரெடிட் கார்ட் மூலம் வழங்கப்படுகின்றன.

அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஜீரோ சதவீத வட்டியும் சலுகையாக வழங்கப்படுகிறது. இத்தகைய அதிரடியான சலுகைகளை பேட்டரி நிறுவனம் வழங்குவதன் நோக்கம், வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு திருப்தியான உணர்வுடன் மாற வேண்டும் என்பது தான்.

அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

இதுகுறித்து பேட்டரி நிறுவனத்தின் நிறுவனர் நிஷ்சால் சௌத்ரி கூறுகையில், சுற்றுசூழலை பாதுகாக்க எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற இந்த தீபாவளியை விட சிறந்த தருணம் வேறென்ன இருக்க போகிறது. நாங்கள் விரும்புவது எல்லாம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் புகையில்லா தீபாவளியை எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் கொண்டாட வேண்டும் என்பதுதான் என கூறினார்.

அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தியுள்ள பேட்டரி நிறுவனம், மற்ற மாநிலங்களிலும் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும் என உறுதியளித்துள்ளது. ஒரே சார்ஜில் சுமார் 90 கிலோமீட்டர் இயங்கக்கூடிய லித்தியம்-இரும்பு கலந்த பேட்டரி கலவை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.

அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

100 சதவீத சார்ஜை அடைவதற்கு இந்த ஸ்கூட்டர் 2.5 மணிநேரத்தில் இருந்து 3 மணிநேரம் வரை எடுத்து கொள்கிறது. மேலும் ப்ரஷ் இல்லாத டிசி மோட்டார், முழுவதும் நவீன தொழிற்நுட்பத்திற்கு மாற்றப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டர், திருட முயற்சித்தால் அலாரம் அடிக்கும் வசதி, யூஎஸ்பி மூலம் மொபைலை சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சாவி இல்லாமல் வண்டியை இயக்கும் அமைப்பு போன்றவையும் சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.

அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்இடி விளக்குகளுடன் முழுவதும் ஸ்டைலிஷான சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த எல்இடி விளக்குகளில் பின்புறத்தில் உள்ள விளக்கு நேர்த்தியான டிசைனால் கண் பறிக்கும் வகையில் உள்ளது. சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பாக ஹைட்ராலிக் ஷாக்குகள் மற்றும் டிஸ்க் ப்ரேக் அமைப்பு இரு சக்கரங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 10 இன்ச் அலாய் சக்கரங்கள் ட்யூப்லெஸ் டயர்களுடன் உள்ளன.

அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

2017ல் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் முறையை கண்டறிந்த பேட்டரி நிறுவனம் இந்த ஸ்கூட்டர் மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் பைக்குகளையும் தயாரித்து வருகிறது.

அழகிய பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தீபாவளிக்கான சலுகைகள் அறிவிப்பு...

மேலும் பேட்டரி நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் அதன் அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களையும் அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் விற்பனை செய்து வருகிறது. இது மாசு அற்ற சுற்றுசூழலை உருவாக்க வழிக்கும். தயாரிக்கும் நிறுவனங்களுடன் அரசாங்கமும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அறிவித்தால் நாட்டில் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2019, 18:11 [IST]
English summary
BattRE Electric Scooter Discounts & Benefits: Low Interest Rate & Other Offers Available
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+