பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு அமோகம்
அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவும் அமோகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கி இருக்கும் பெனெல்லி நிறுவனம் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தொடர்ந்து பல புதிய மாடல்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், லியோன்சினோ பைக் மாடல்களை தொடர்ந்து இம்பீரியல் 400 என்ற ரெட்ரோ க்ளாசிக் ரக மாடலை அண்மையில் விற்பனைக்கு களமிறக்கியது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மற்றும் ஜாவா 42 பைக் மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த புதிய பெனெல்லி பைக்கிற்கு இந்தியாவில் நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. இதுவரை 1,200 பேர் இந்த புதிய பைக் மாடலுக்கு முன்பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் தோற்றத்தில் சிறப்பாக இருப்பதுடன், எஞ்சின் செயல்திறனும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இதனால், ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மற்றும் ஜாவா 42 மாடல்களுக்கு மாற்று மாடலை தேடியவர்களுக்கு சிறந்த சாய்ஸாக அமைந்துள்ளது.

இந்த புதிய ைக்கில் 373.5 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயனப்டுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 21 பிஎஸ் பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வந்துள்ள மாடல் பிஎஸ்-4 எஞ்சின்தான் உள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎஸ்-6 எஞ்சின் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிஸ்க் பிரேக்குகள், டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை முக்கிய அம்சங்களாக பெற்றிருக்கிறது. இது கையாள்வதற்கு எளிதான மாடலாகவும் இருக்கும்.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் ரூ.1.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் களமிறக்கப்பட்டுள்ளதும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இது ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா நிறுவனங்களின் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க அளவு வர்த்தகத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு மூன்று ஆண்டுகள் அல்லது வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு திட்டமும் கொடுக்கப்படுவதால், வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








