பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளது. ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ள பெனெல்லி தொடர்ந்து பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது லியோன்சினோ 250 என்ற ஸ்க்ராம்ப்ளர் வகை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் மிக குறைவான சிசி திறன் கொண்ட ஸ்க்ராம்ப்ளர் வகை மாடலாக பெனெல்லி லியோன்சினோ 250 பைக் வந்துள்ளது. அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பெனெல்லி லியோன்சினோ 500 பைக்கின் டிசைன் அம்சங்களை இந்த பைக்கும் பெற்றிருக்கிறது.

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

எனினும், இந்த பைக்கின் ஸ்டீல் டிபியூலர் ட்ரெல்லிஸ் வகை ஃப்ரேம், ஸ்விங் ஆர்ம் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவை தனித்துவமானதாக இருக்கின்றன. அதாவது, இந்த பைக்கிற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் ஒரு சிலிண்டர் கொண்ட 249 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 25.8 எச்பி பவரையும்,, 21 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பெனெல்லி லியோன்சினோ 250 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் உள்ளன. டிஜிட்டல் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஒரே அமைப்புடைய இருக்கையும், தனித்துவமான எரிபொருள் கலனும் இடம்பெற்றுள்ளன.

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பெனெல்லி லியோன்சினோ 250 பைக்கில் 17 அங்குல அலாய் வீல்கள், 41 மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

அதேபோன்று, முன்புறத்தில் 280 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பெனெல்லி லியோன்சினோ 250 பைக் ரூ.2.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்போதைக்கு இந்த பைக்கிற்கு நேர் போட்டியாளர்கள் இல்லை. விலை அடிப்படையில் கேடிஎம் 390 ட்யூக், ஹோண்டா சிபி300ஆர் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 4, 2019, 13:07 [IST]
English summary
Italian bike manufacturer, Benelli has launched new Leoncino 250 scrmbler bike in India.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+