புதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்!

பெனெல்லி லியோன்சினோ 500 பைக் நாளை மறுதினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்!

பெனெல்லி நிறுவனத்தின் பிரிமீயம் பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், நேக்கட் ஸ்ட்ரீட் மற்றும் ஃபேரிங் பேனல்கள் மாடல்கள் மூலமாக வாடிக்கையாளர்களை வசியம் செய்த இந்த நிறுவனம் தற்போது நடுத்தர ரக ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைல் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்!

லியோன்சினோ என்ற பெயரிலான இந்த மாடல் ஸ்க்ராம்ப்ளர் ரகத்திலான இந்த புதிய பைக் மாடல் நடுத்தர வகை பிரிமீயம் மாடலாகவும் நிலைநிறுத்தப்பட உள்ளது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்!

பெனெல்லி லியோன்சினோ 500 பைக் வெளிநாடுகளில் ஸ்டான்டர்டு, ட்ரெயில் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஸ்டான்டர்டு என்ற சாதாரண சாலை பயன்பாட்டுக்கான மாடல்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்!

வட்டவடிவிலான ஹெட்லைட்டுகள், குட்டையான வால்பகுதி, கச்சிதமான இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றுடன் ஓர் சிறந்த ஸ்க்ராம்பளர் வகை மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், இண்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர், முழுமையான டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்டரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும்.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்!

இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் கொண்ட 500 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 46.8 பிஎச்பி பவரையும், 46 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்!

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக்கில் 50 மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் இரட்டை டிஸ்க்குகளும், பின்சக்கரத்தில் ஒரு டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்!

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக்கிற்கு இதுவரை முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை. ஆனால், டீலர்களில் ரகசியமாக முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்!

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 என்ற இந்த புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடலுக்கு ரூ.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. கவாஸாகி இசட்650, சிஎஃப் மோட்டோ 650எம்டி உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு மறைமுகமாக போட்டியை தரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 3, 2019, 11:45 [IST]
English summary
Benelli is all set to launch all new Leoncino 500 scrambler style bike in India on 5 August.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+