புதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது!

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய பெனெல்லி பைக் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது!

வெளிநாடுகளில் பெனெல்லி லியோன்சினோ பைக்கானது ஸ்டான்டர்டு, ட்ரெயில் மற்றும் ஸ்போர்ட் என்ற வெவ்வேறு பயன்பாட்டுக்கு உகந்த வகையில் மூன்று மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், சாதாரண சாலையில் பயன்படுத்தக்கூடிய ஸ்டான்டர்டு மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பெனெல்லி திட்டமிட்டுள்ளது.

புதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது!

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது!

இந்த புதிய பைக் ஸ்க்ராம்ப்ளர் வகையிலான டிசைன் தாத்பரியங்களை பெற்றுள்ளது. பெனெல்லி டிஆர்கே 502 பைக்கில் இருக்கும் எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை இந்த பைக் மாடலும் பங்கிட்டுக் கொள்கிறது. அதேநேரத்தில், பல முக்கிய மாற்றங்களுடன் ஸ்க்ராம்ப்ளர் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

புதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது!

புதிய பெனெல்லி பைக்கில் இரண்டு சிலிண்டர்களுடன் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 499.6 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.6 எச்பி பவரையும், 45 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக்கில் ட்யூபியூலர் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் முன்புறத்தில் 50 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

புதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது!

அதேபோன்று, முன்புறத்தில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 320 மிமீ விட்டமுடைய டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபருடன் கூடிய 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக் 207 கிலை எடை கொண்டது.

புதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது!

புதிய பெனெல்லி லியோன்சினோ பைக் மலேசியாவில் இருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். வெளிநாடுகளில் பெனெல்லி லியோன்சினோ 500 மற்றும் பெனெல்லி டிஆர்கே 502 ஆகிய பைக் மாடல்கள் கிட்டத்தட்ட நெருக்கமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் இரு மாடல்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும்.

புதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது!

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் இந்தியாவில் ரூ.4.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பெனெல்லி டிஆர்கே 502 பைக்கைவிட ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை விலை வித்தியாசம் இருக்க வாய்ப்புள்ளது.

Source: Autocarindia

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
According to reports, 2019 Benelli Leoncino 500 will launch in India very soon and it will be available in a standard variant only.
Story first published: Tuesday, July 30, 2019, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X