மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

பெனெல்லி நிறுவனம் தனது இருசக்கர வாகனத்தை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்துவருகிறது. முந்தைய விலையைக் காட்டிலும் தற்போது கணிசமான அளவு விலையை உயர்த்தி இந்த நிறுவனம் பைக்குகளை விற்பனைச் செய்துவருகிறது. இதன் விலைப் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

இத்தாலி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான பெனெல்லி, இந்தியாவில் உள்ள மஹாவீர் குழுமத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனம் முன்னதாக டிஎஸ்கே குழுமத்துடன் கூட்டாளியாக இருந்து வந்தது. நிதிநெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் இந்த நிறுவனத்துடனான கூட்டணியை பெனெல்லி முறித்துக்கொண்டது. மேலும், புதிய பங்குதாரரை எதிர்நோக்கி இருந்தது.

மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

இந்த நிலையில்தான், சில மாதங்களுக்கு முன்பு ஆதீஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா நிறுவனத்துடன் பெனெல்லி இணைந்தது. இந்த ஆதீஷ்வர் நிறுவனமானது ஹைதராபாத்தைச் சேர்ந்த மஹாவீர் குழுமம் ஆகும். இந்த நிறுவனம் ஏற்கனவே, மெர்சிடிஸ் பென்ஸ், இசூசு, ஸ்கோடா, சுஸூக்கி, இந்தியன் உள்ளிட்ட பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் டீலர்ஷிப்பினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

இத்துடன் பெனல்லி நிறுவனமும் மஹாவீர் குழுமத்துடன் இணைந்து தனது புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. அவ்வாறு, பெனல்லி நிறுவனம், மல்டி சிலிண்டர் கொண்ட 300சிசி எஞ்ஜின் முதல் 1,199சிசி கொண்ட எஞ்ஜினுடைய பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துகிறது.

மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

பெனல்லி நிறுவனம் மஹாவீர் குழுமத்துடன் இணைந்தபிறகு, அட்வெண்டர் பைக்குகளான டிஆர்கே502 மற்றும் டிஆர்கே502எக்ஸ் ஆகிய இரண்டு மாடல் பைக்குகளை முதலில் அறிமுகம் செய்தது. இந்த இரண்டு மாடலிலும் 499.6சிசி கொண்ட DOHC பேரலல் ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 47.5பிஎச்பி பவரையும், 46 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இதில் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

இதைத்தொடர்ந்து, டிஎன்டி300, 302ஆர் மற்றும் டிஎன்டி600ஐ ஆகிய புதிய பைக்குளையும் பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதேபோன்று, இந்த நிதியாண்டிற்குள் மேலும் 12 புதிய மாடல் பைக்குகளையும் பெனெல்லி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பைக்குகள் இத்தாலியன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டாலும் சீனாவைச் சேர்ந்த கியான்ஜியாங் குழுமத்தின் மூலம் புத்தாக்கம் செய்யப்படுகிறது.

மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

பைக்குகளின் விற்பனை சில நேரங்களில் அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதற்கு இந்த நிறுவனத்தின் பார்ட்னர்ஷிப் அடிக்கடி மாற்றம் அடைவதே காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்தின் பழைய வாடிக்கையாளர்களும் சில இடையூறுகளைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

பெனெல்லி நிறுவனம் மஹாவீர் குழுமத்துடன் இணைந்து நாடு முழுவதும் 16 டீலர்ஷிப்புகளை தொடங்கியுள்ளது. தற்போது களமிறக்கப்பட்டுள்ள பைக்குகளுக்கு இந்தியச் சந்தையில் நல்வரவேற்பு கிடைக்குமானால், இதன் விரிவாக்கம் மேலும் அதிகரிக்கப்படும் என்று பெனெல்லி தெரிவித்துள்ளது.

மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

பெனெல்லி நிறுவனம் டிஎஸ்கே நிறுவனத்துடன் இணைந்து பைக்குகளை விற்பனைச் செய்ததைக் காட்டிலும் தற்போது கணிசமான அளவு விலையை உயர்த்தி பைக்குகளை அறிமுகம் செய்கின்றது. மேலும், தற்போது வெளிவரும் பைக்குளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை அந்த நிறுவனம் இணைத்து வருகின்றது. இதன்படி, இந்தியாவில் விற்பனையாகும் பெனெல்லி பைக்குகளின் விலையை கீழே காணலாம்.

மலைக்க வைக்கும் பெனெல்லி பைக்கின் விலை: ஆரம்ப விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம்...

பெனெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை 2019:

டிஎன்டி300 - 3.50 லட்சம் (TNT 300 - INR 3.50 Lakh)

302ஆர் - 3.70 லட்சம் (302R - INR 3.70 Lakh)

டிஆர்கே502 - 5 லட்சம் (TRK 502 - INR 5.00 Lakh)

டிஆர்கே502எக்ஸ் - 5.40 லட்சம் (TRK 502X - INR 5.40 Lakh)

டிஎன்டி600ஐ - 6.20 லட்சம் (TNT 600i - INR 6.20 Lakh)

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2019, 13:11 [IST]
English summary
Benelli Motor Cycle Price In India. Read In Tamil.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+