டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்!

பெனெல்லி பைக் நிறுவனம் புத்தம் புதிய க்ரூஸர் பைக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்!

இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கி இருக்கும் பெனெல்லி நிறுவனம் பல புதிய பைக் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை குறிவைத்து இம்பீரியல் 400 என்ற க்ரூஸர் பைக் மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்!

இந்தநிலையில், பெனெல்லி நிறுவனம் தனது 502சி என்ற புதிய க்ரூஸர் பைக் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புதிய பெனெல்லி 502சி பைக்கின் மிக முக்கிய அம்சமே, இந்த பைக் டுகாட்டி டயாவெல் பைக் போன்றே அசத்தலான ஸ்டைலில் இருப்பதுதான்.

டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்!

பெனெல்லி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜாபக் ஸிக்வீல்ஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், புதிய 502சி க்ரூஸர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை உறுதி செய்துள்ளார்.

டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்!

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பெனெல்லி டிஆர்கே 502 பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 47.5 பிஎஸ் பவரையும், 46 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.

டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்!

புதிய பெனெல்லி 502சி க்ரூஸர் பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கும். அதேபோன்று, முன்சக்கரத்தில் ரேடியல் காலிபர்களுடன் கூடிய 280 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்!

புதிய பெனெல்லி எல்இடி லைட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 17 அங்குல அலாய் வீல்கள், பைரெல்லி ஏஞ்சல் எஸ்டி டயர்கள் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும்.

டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்!

நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவாக இந்த பைக்கில் 21.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கும். முழுமையாக பெட்ரோல் நிரப்பினால், அதிகபட்சமாக 550 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்!

புதிய பெனெல்லி 502சி க்ரூஸர் பைக் மாடலானது ரூ.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் கவாஸாகி வல்கன் எஸ் ஆகிய பைக் மாடல்களுடன் இந்த புதிய பைக் போட்டி போடும்.

Source: Zigwheels

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2019, 13:56 [IST]
English summary
Benelli has confirmed that will launch the 502C cruiser bike in India by next year.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+