பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் பைக் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!

இந்தியாவில் அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து அனைத்து முன்னணி பைக் நிறுவனங்களும் அட்வென்ச்சர் ரக பைக் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், பெனெல்லி நிறுவனம் அண்மையில் டிஆர்கே-502 மற்றும் டிஆர்கே-502எக்ஸ் என்ற இரண்டு அட்வென்ச்சர் பைக் மாடல்களை களமிறக்கியது.

பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!

இந்த இரண்டு மாடல்களுக்கும் சிறப்பான புக்கிங் கிடைத்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு 15 நாட்களில் 150க்கும் மேற்பட்டோர் இந்த பைக் மாடல்களுக்கு புக்கிங் செய்துள்ளனர். டிஆர்கே-502 மாடலுக்கு 65 பேரும், டிஆர்கே-502எக்ஸ் என்ற விலை உயர்ந்த மாடலுக்கு 84 பேரும் முன்பதிவு செய்துள்ளதாகவும், தொடர்ந்து புக்கிங் சிறப்பாக இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!

பெனெல்லி டிஆர்கே-502 பைக்கானது முழுமையான அட்வென்ச்சர் டூரர் ரக மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பெனெல்லி டிஆர்கே-502எக்ஸ் மாடலானது ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பல்வேறு கூடுதல் அம்சங்களை பெற்றிருக்கிறது.

பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!

அதேநேரத்தில், இந்த இரண்டு மாடல்களிலுமே பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 499.6சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.6 பிஎஸ் பவரையும், 45 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!

புதிய பெனெல்லி டிஆர்கே-502 பைக் ரூ.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும்,, டிஆர்கே-502எக்ஸ் பைக் ரூ.5.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. ரூ.10,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது.

பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!

இந்த இரண்டு பைக்கிற்கும் 5 ஆண்டுகள் அல்லது வரம்பு இல்லாத கிலோமீட்டர்களுக்கான வாரண்டியும் கிடைக்கிறது. இதுவும் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாடல்கள் தவிர்த்து, டிஎன்டி300, 302ஆர் மற்றும் டிஎன்டி600ஐ ஆகிய பைக் மாடல்களையும் பெனெல்லி இந்தியாவில் விற்பனை செய்கிறது.

பெனெல்லி டிஆர்கே-502 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!

இந்த முன்பதிவு எண்ணிக்கை பெனெல்லி நிறுவனத்திற்கு உற்சாகத்தை தந்துள்ளது. இந்த வரவேற்பை தொடர்ந்து டீலர்களின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது 16 ஆக இருக்கும் டீலர் எண்ணிக்கை விரைவில் 18 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டிற்குள் 40 டீலர்கள் என்ற இலக்கை அடையவும் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 21, 2019, 17:55 [IST]
English summary
Benelli TRK 502, TRK 502X has recieved 150 bookings in just 15 days since their launch.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+