பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

பெனெல்லி நிறுவனம், அதன் டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு அட்வென்சர் ரக மோட்டார் சைக்கிள்களையும் டெலிவரி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

இந்தியாவில் அட்வென்சர் ரக பைக்குகளுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகின்றது. இதன்காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் அட்வென்சர் ரகத்திலான மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் தொடர்ச்சியாக களமிறக்கி வருகின்றன.

பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

அந்த வகையில், பெனெல்லி நிறுவனம் டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு அட்வென்சர் ரக மோட்டார் சைக்கிள்களை அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களின் டெலிவரியும் தற்போது தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை இந்தியன் ஆட்டோ பிளாக் இணையதளம் வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

பெனெல்லி டிஆர்கே 502 மோட்டார் சைக்கிள் ரூ. 5 லட்சம் என்ற டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையிலும், டிஆர்கே 502எக்ஸ் மோட்டார் சைக்கிள் ரூ. 5.40 லட்சம் என்ற டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த இரு அட்வென்சர் பைக்குகளின் விலையையும் அந்த நிறுவனம் உயர்த்தி அண்மையில் அறிவித்தது.

பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

அதன்படி, இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் என்ற விலையுயர்வை பெனெல்லி இந்தியா நிறுவனம் நிர்ணயித்தது. இதனால், டிஆர்கே 502வின் விலை ரூ. 5.10 லட்சமாகவும், டிஆர்கே 502எக்ஸின் விலை ரூ. 5.50 லட்சமாகவும் உயர்ந்தது. இதுவும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

என்னதான், இந்த மோட்டார் சைக்கிளின் விலை அதிகரிக்கப்பட்டாலும், இவற்றிற்கான புக்கிங் சுமூகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 15 நாட்களிலேயே 150க்கும் மேற்பட்ட யூனிட்களுக்கான புக்கிங்குகளை இந்த இரு அட்வென்சர் பைக்குகளும் அள்ளிக் குவித்திருந்தன.

பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

அந்தவகையில், கடந்த மார்ச் 21ம் தேதி வரையிலான நிலவரப்படி, டிஆர்கே-502 மாடலுக்கு 65 பேரும், டிஆர்கே-502எக்ஸ் என்ற ஹை வேரியண்டுக்கு 84 பேரும் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், இந்த புக்கிங் தற்போதுவரை சிறப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

இவ்வாறு, இந்த இரு பைக்குகளுக்குமான புக்கிங்குகள் சிறப்பாக நடைபெற்று வந்தநிலையில், அவற்றை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணியை அதன் டீலர்கள் மேற்கொண்டுள்ளனர். அந்தவைகையில், முன்னதாக இந்த பைக்குளின் டெலிவரி வட இந்தியப் பகுதியான நொய்டாவிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்டது. தொடர்ந்து, கௌகாத்தி, வதோதரா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.

பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

பெனெல்லி டிஆர்கே 502, டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 499.5சிசி பேரலல் டிவின், லிக்யூட் கூல்டு, டிஓஎச்சி, 8 வால்வு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 46 என்எம் டார்க் திறனை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸுடன் இயங்குகிறது. இவ்விரு மோட்டார் சைக்கிள்களும், கிரே, ரெட் மற்றும் ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.

பெரும் எதிர்பார்க்கப்பட்ட பெனெல்லி ட்வின் பைக்குகள் டெலிவரி தொடக்கம்...!

இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமாக, பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் மோட்டார் சைக்கிளை அந்த நிருவனம் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ப வடிவமைத்துள்ளது. அந்த வகையில், ஆஃப் ரோடு பயணத்திற்கான, வீல்கள், டயர்கள், சைலென்சர் அமைப்புகள் உள்ளிட்டவை பிரத்யேகமாக பொருத்தப்பட்டுள்ளன.

Image Courtesy: Instagram

More from DriveSpark

Article Published On: Wednesday, May 15, 2019, 13:28 [IST]
English summary
Benelli TRK 502 & TRK 502X Deliveries Started In India. Read In Tamil.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+