அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சேத்தக்கிற்கு போட்டியளிக்கும் வகையில், அதிவேகமாக ஓடும் திறனைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பென்லிங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

பென்லிங், சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகின்றது. இது, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம், இந்தியாவிற்கான புதிய மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

அந்த ஸ்கூட்டர் அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிரபல பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சேத்தக்-கிற்கு போட்டியாக இருக்கலாம் என கருதப்படுகின்று.

ஆரா என்ற பெயரில் களமிறங்கும் இந்த ஸ்கூட்டர் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய பிரிமியம் வசதியைப் பெற்ற ஸ்கூட்டராக இருக்கின்றது. இந்த திறனில் இந்தியாவில் களமிறங்கும் முதல் இ-ஸ்கூட்டர் இதுவே ஆகும்.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

இந்த ஸ்கூட்டரின் விலை மற்ற நிறுவனங்களுடன் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்காக ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உள்நாட்டிலேயே (இந்தியா) வைத்து தயாரிக்க பென்லிங் திட்டமிட்டிருக்கின்றது.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

இதற்காக, ஹரியானா மாநிலம், மனோசரில் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில், பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது.

பென்லிங் நிறுவனம், 2019 மே மாதம்தான் இந்தியாவில் செயல்படத் தொடங்கியது. இது, களமிறங்கிய வேகத்திலேயே க்ரிதி, ஃபால்கன் மற்றும் ஐகான் ஆகிய மூன்று குறைந்த வேகம் கொண்ட ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. இவையனைத்தும் ஆரம்பநிலை மாடல்களாகும். இதைத்தொடர்ந்தே, புதிதாக அதிவேக திறன் கொண்ட ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

இந்த ஸ்கூட்டரின் உற்பத்திக்கு சர்வதேச தொழில்நுட்ப மையம் (ICAT) மற்றும் அரசின் சான்று கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்தே, அதனை தயாரிக்கும் பணியில் பென்லிங் களமிறங்கியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 90 ஆயிரம் என்ற விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆகையால், கடுமையாக போட்டியளிக்கும் விலையில் கிடைக்கும் என தெரிகின்றது.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

ஆர எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பென்லிங் நிறுவனம் ஓர் தனித்துவமான வசதியை அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், பிரேக் டவுன் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (BSAS) அதில் இடம்பெற இருக்கின்றது.

இது, பேட்டரி, மோட்டார் அல்லது பிஎம்எஸ் மற்றும் கன்ட்ரோலர்களில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக ஸ்கூட்டர் நடு வழியிலேயே நின்று விடுமானால் அதனை குறைந்த வேகத்தில் இயக்க பிஎஸ்ஏஎஸ் தொழில்நுட்பம் உதவும். இதற்காக தனிப்பட்ட பொத்தான் வழங்கப்பட்டுள்ளது.

MOST READ: 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்...

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

அந்த பட்டனை அழுத்தினால் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 15 முதல் 20 கிமீ வேகம் வரை செல்லும். இது பேட்டரியின் சார்ஜ் அளவைப் பொருத்து மாறுபடலாம். ஆகையால், ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரேக் டவுன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1200 பிஎல்டிசி மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 72வோல்ட்/40Ah அளவுடைய லித்தியம் அயன் பேட்டரி மூலம் தேவையான திறனைப் பெற்றுக்கொள்கின்றது.

MOST READ: இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் தேவைப்படுகின்றது. அதேசமயம், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 110 முதல் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இந்த ஸ்கூட்டர் உச்சபட்சமாக மணிக்கு 60 கிமீ என்ற வேகத்தில் செல்லும்.

MOST READ: விளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய வீடுகளில் உள்ள மின்சார பாயிண்டே போதுமானதாக இருக்கின்றது. ஆகையால், சார்ஜிங் நிலையங்களை தேடி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

இதேபோன்று, ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிறப்பு வசதியாக ஆன்டி தெஃப்ட் அலர்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பின்பக்க வீலை இயங்காத வண்ணம் பூட்டிக்கொள்ளுதல் மற்றும் ரிமோட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் ஸ்கூட்டரை சாவி இல்லாமலே ஆன் மற்றும் ஆஃப் செய்துகொள்ள முடியும்.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

இதையடுத்து, ஸ்கூட்டரின் சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ட்வின் ஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் வசதிக்காக ஸ்கூட்டரின் இரு முனைகளுக்கும் டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளது.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்ப்பதற்கு பாரம்பரிய தோற்றம் கொண்ட வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் போன்று காட்சியளிக்கின்றது. வட்டவடிவிலான ஹெட்லேம்ப், கௌல் பொருந்திய இன்டிகேட்டர்கள், சமதளமான இருக்கை மற்றும் நீளமான கால் வைக்கும் பகுதி உள்ளிட்டவை வெஸ்பாவில் இடம்பெற்றிருப்பதைப் போன்றே காட்சியளிக்கின்றது.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

இத்துடன், முழுமையான டிஜிட்டல் தரம் கொண்ட இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல் மற்றும் ஸ்மார்ட்போன் இணைக்கும் தொழில்நுட்ப வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்கூட்டர் திருடப்பட்டால், அதன் இருப்பிடத்தைக் கண்டறியும் வகையில் உட்கட்டமைப்புக் கொண்ட ஜிபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பென்லிங்... பஜாஜ் சேத்தக்கின் எதிராளி இதுதான்...

பென்லிங் தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், குருகிராம் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் 25 டீலர்ஷிப் ஷோரூம்களை இயக்கி வருகின்றது. இதனை மேலும் விரிவாக்கம் செய்ய அது திட்டமிட்டுள்ளது.

இந்த ஷோரூம்களில் கூடிய விரைவில் பென்லிங் ஆரா அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Benling Aura Electric Scooter Launch Soon. Read In Tamil.
Story first published: Saturday, October 19, 2019, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X