இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125சிசி பைக்கில் எது சிறந்தது என உங்களுக்கு தெரியுமா...? இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

இந்திய வாகனச் சந்தையில் 125 சிசி ரகத்திலான இரு சக்கர வாகனங்களுக்கு அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதன்காரணமாக பஜாஜ், கேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் 125 சிசி திறனிலான பைக்குகளை களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

அந்தவகையில், கேடிஎம் நிறுவனம் ட்யூக் மற்றும் ஆர்சி மாடல்களில் 125 சிசி திறனிலான புதிய இருசக்கர வாகனங்களை அண்மையில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து, ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர் மற்றும் ஹீரோ கிளாமர் உள்ளிட்ட மாடல் பைக்குகளும் 125சிசி தரத்தில் களமிறக்கப்பட்டன.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

இவை பிரிமியம் தரம் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளைப் போல நல்ல பிக்-அப் திறனைப் பெற்றிருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இவை மலிவு விலையில் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் ரக பைக்காக காட்சியளிப்பதால், இன்றளவும் 125சிசி பிரிவில் களமிறங்கும் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

அவ்வாறு, தற்போது 125சிசி பிரிவில் சந்தையை கலக்கி வரும் பைக்குகள்குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம். மேலும், அதில் எது சிறந்தது என்பதைப் பற்றியும் இதில் ஆய்வோம்.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

பஜாஜ் டிஸ்கவர் 125:

இந்தியாவில் விற்பனையாகும் 125 சிசி பைக்குகளிலேயே மிக விலைக் குறைந்த மாடலாக பஜாஜ் டிஸ்கவர் 125 மாடல் இருக்கின்றது. விலை மலிவானாத இருந்தாலும், அதில் சிறப்பம்சங்களுக்கு எந்தவொரு குறைவும் இல்லை. அந்தவகையில், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் நடுத்தர டிஜிட்டல் ரகத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட வசதிகள் காணப்படுகின்றன.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

இத்துடன், டிஸ்க் பிரேக் மற்றும் கேஸ் சார்ஜட் ஷாக் அப்சார்பர் பின்புறத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இது ரைடருக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். மேலும், இதன் 125சிசி திறனிலான எஞ்ஜின் 124.5 சிசி வெளிப்படுத்தும். மேலும், இது அதிகபட்சமாக 11பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க்கையும் வழங்கும். ஆகையால், இந்த பைக் விலைக்கேற்ற மதிப்பிலான 125சிசி பைக்காக இந்தியாவில் காணப்படுகின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

ஹோண்டா ஷைன்/ ஷைன் எஸ்பி:

பஜாஜ் நிறுவனத்தின் டிஸ்கவர் 125 மாடலை அடுத்து மலிவான விலைக் கொண்டதாக ஹோண்டா ஷைன் 125சிசி பைக் இருக்கின்றது. ஆனால், இதன் எஸ்பி மாடல் அதைவிட 5 ஆயிரம் ரூபாய் அதிகமானதாக இருக்கின்றது. ஆகையால், ஹோண்டா ஷைன் 63,627 என்ற விலையிலும், ஷைன் எஸ்பி மாடல் 68, 938 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகி வருகின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

ஹோண்டா ஷைன் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், இது இந்த பிரிவின் தலைவனாக செயல்பட்டு வருகின்றது. அதேசமயம், இந்த பைக் பழைய டிசைன் மற்றும் குறைந்த அம்சங்களைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

ஆனால், இந்த பைக் உறுதியான கட்டமைப்பைக் கொண்டிருப்பாதல் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதில், 124 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 10.3 பிஎஸ் பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இதில், ஷைன் எஸ்பி மாடல் சற்று ஸ்போர்ட்டி லுக்கில் காணப்படுகின்றது. இது நெடுஞ்சாலைகளில் அதீத திறனை வெளிப்படுத்தும் வகையில் எஞ்ஜின் திறனைப் பெற்றிருக்கின்றது. உங்களுக்கு பிரிமியம் தரத்தைப் பற்றிய கவலை இல்லையென்றால், ஹோண்டா ஷைன் மாடலையே வாங்கிக்கொள்ளலாம்.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

ஹீரோ கிளாமர் 125 எப்ஐ:

ஹீரோ கிளாமர் 125சிசி பைக் பிரிமியம் ரகத்தில் காட்சியளிக்கின்றது. இந்த பைக்கின் பாடி பேனல்கள் பிரம்மிப்பான அளவில் காட்சியளிக்கின்றது. அதேசமயம், அதன் ஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் இது சற்று பெரிய தோற்றத்தில் இருக்கின்றது. மேலும், இதில் கூடுதல் சிறப்பு வசதியாக ப்யூவல் இன்ஜெக்டட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திறனில், ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே பைக்காக இது இருக்கின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

இதில், பொருத்தப்பட்டுள்ள 124.7சிசி எஞ்ஜின் 11.6 பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. அதேசமயம், இந்த பைக் குறைந்த நேரத்தில் அதிக வேகம் மற்றும் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், இந்த பைக் ஸ்போர்ட்டி லுக்கில் காட்சியளிக்கவில்லை என்றாலும். அதற்கு ஈடான வகையில் ரைடிங் அனுபவத்தை அது வழங்குகின்றது. இந்த பைக் இந்தியாவில் ரூ. 69.950 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

பஜாஜ் பல்சர் 125:

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்கில் ஒன்றாக பல்சர் இருக்கின்றது. இதன்காரணமாக, பஜாஜ் பல்சர் வரிசையில் 125 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் நியான் என்ற பெயரில் விற்பனையாகி வருகின்றது. இது, பஜாஜ் பல்சர் ஸ்டாண்டர்டு வேரியண்டைப் போலவே காட்சியளிக்கின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

இந்த பைக்கில், 124.4 சிசி திறனிலான ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 12 பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த திறன், இந்தியாவில் விற்பனையாகும் மற்ற 125சிசி பைக்கைக் காட்டிலும் அதிகம் திறன் கொண்டதாக இருக்கின்றது. ஆகையால், அதிகம் சக்தி கொண்ட 125சிசி பைக்கை வாங்க விரும்பும் ரைடர்கள் பல்சர் 125 நியானை வாங்கிக் கொள்ளலாம். இது ரூ. 66,618 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

கேடிஎம் 125 ட்யூக்:

கேடிஎம் நிறுவனத்தின் 125 ட்யூக் பைக் ரூ. 1.30 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதில், பல்வேறு பிரிமியம் ரகத்திலான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதன்காரணமாகவே இத்தகைய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டைல் மற்றும் சில சிறப்பம்சங்கள் 200 ட்யூக் மாடலில் இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

இந்த பைக்கில் சிறந்த திறனை வெளிப்படுத்தும் விதமாக 124சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 14.9 பிஎஸ் பவரையும், 12 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. நீங்கள் பெரும்பாலான நேரத்தை நகரத்தின் சாலைகளிலேயே செலவிடும் வழக்கம் கொண்டவரானால், இந்த ஸ்போர்ட்டி லுக்கிலான கேடிஎம் 125 ட்யூக் பைக் உகந்ததாக இருக்கும்.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

கேடிஎம் ஆர்சி 125:

ட்யூக் 125 மாடலைத் தொடர்ந்து கேடிஎம் நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வரும் மற்றுமொரு மாடலாக கேடிஎம் ஆர்சி 125 இருக்கின்றது. இது, இந்தியாவில் விற்பனையாகும் அதிக விலைக் கொண்ட 125 சிசி பைக்கில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கின்றது. அந்தவகையில், இதற்கு ரூ. 1.47 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் கேடிஎம் ஆர்சி 390 மாடலின் டிசைன் தாத்பரியங்களைப் பெற்றிருக்கின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

இந்த பைக்கில், கேடிஎம் 125 ட்யூக் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதன் அதிக விலைக்கேற்ற வகையில், பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றதாக இருக்கின்றது. அந்தவகையில், உயர் ஸ்பெக் மாடலில் இடம்பெற்றிருக்கும் வசதிகளான டபிள்யூபி அப்சைட் டவுண் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் உள்ளிட்டவை காணப்படுகின்றது. இதேபோன்று, பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட வசதிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

நாம் பார்த்த அனைத்து 125சிசி திறனிலான பைக்குகளுமே வாங்குவதற்கு ஏதுவான பைக்காக இருக்கின்றன. ஏனென்றால், ஒவ்வொன்றும் அதன் விலைக்கேற்ப வகையிலான டிசைன் மற்றும் அம்சங்களைப் பெற்றதாக இருக்கின்றன. இருப்பினும், விலை சற்று அதிகமானதாக இருந்தாலும், பல்வேறு பிரிமியம் வசதிகளைக் கொண்டிருப்பதால் கேடிஎம் ஆர்சி 125 பைக் வாங்குவதற்கு உகந்ததாக இருக்கின்றது.

இந்திய இருசக்கர வாகன சந்தையை கலக்கும் 125 சிசி டூ வீலர்கள்: எது சிறந்தது என தெரியுமா...?

இருப்பினும், ப்யூவல் இன்ஜெக்ட் எஞ்ஜின் திறனில் இருக்கும் பஜாஜ் பல்சர் 125 நியான், கேடிஎம் பைக்குகளைக் காட்டிலும் கூடுதல் சிறப்பானதாக இருக்கின்றது. அதன் விலை மற்றும் சக்தி உள்ளிட்டவை படு அமர்க்களமானதாக இருக்கின்றது.

Most Read Articles
English summary
Best 125cc Bikes In India. Read In Tamil.
Story first published: Tuesday, September 3, 2019, 11:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X