டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

சீனாவைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனம், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் மாடல் பைக்கை டூப்ளிகேட் செய்து தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

சீனாவைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரபல மாடலான ஜி310ஜிஎஸ் பைக்கை டூப்ளிகேட் செய்து தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை சீன நாட்டு செய்தி தளமான நியூமோட்டார்.காம்.சிஎன் என்ற தளம் வெளியிட்டுள்ளது.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

முன்னதாக, பிரபல நிறுவனங்களின் பெயரையும், தயாரிப்புகளையும் ஒத்தவாறு, செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து வந்த சீன நிறுவனங்கள், தற்போது வாகனங்களையும் டூப்ளிகேட் செய்யும் பணியில் இறங்கியுள்ளன.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

முன்னதாககூட இதேபோன்று, பிரபல நிறுவனம் ஒன்றின் காரினை டூப்ளிகேட் செய்து, சீன நிறுவனம் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்நிலையில், எவரெஸ்ட் கெய்யூ 400 என்ற பெயரில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி310ஜிஎஸ் பைக் டூப்ளிகேட் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

இந்த பைக், தற்போது சீனாவில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மதிப்பில் 29,800 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில் ரூ. 2.98 லட்சமாகும்.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

மாடல் மட்டுமல்ல, எவரெஸ்ட் கெய்யூ 400எக்ஸ் மாடலின் சிறப்பம்சங்களும், அப்படியே பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கினைப் போன்றே பெற்றிருக்கின்றது. அந்தவகையில், எக்ஸ்டெண்டட் வின்ட்ஸ்கிரீன், ப்யூவல் டேங்க் மற்றும் ப்யூவல் டேங்க் எக்ஸ்டென்சன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஜி310ஜிஎஸ் பைக்கை ஒத்தவாறே காட்சியளிக்கின்றது.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

அதுமட்டுமின்றி, கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் இருக்கையின் உயரமும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது. சொல்லப்போனால், இரு பைக்குகளின் பெயர்களையும் மறைத்து விட்டு, உங்கள் எதிரில் நிறுத்தப்பட்டால், இரண்டில் எது பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக் என்றே உங்களால் வித்தியாசம் கண்டறிய முடியாது. அந்த அளவிற்கு டூப்ளிகேட்டை பார்த்து பார்த்து நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

அதற்கேற்ப வகையில், பிஎம்டபிள்யூ பைக்கில் ஸ்போர்ட்டி லுக்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்றே, ஷார்ப்பான ஹெட்லேம்ப், க்னக்கிள் குவார்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

இதைத்தொடர்ந்து, பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள நிறமும், சற்றும் வித்தியாசத்தைத் தோற்றுவிக்காத வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தைக் கண்டாலே புரிந்து கொள்ள முடியும்.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

இத்துடன், எவரெஸ்ட் கெய்யூ 400எக்ஸ் மாடலில் 12வோல்ட் போர்ட், 20 லிட்டர் ப்யூவல் டேங்க் கெபாசிட்டி, லக்கேஜ் பேன்னியர்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அனைத்து அம்சங்களிலும் ஒரே மாதிரியாக காட்சியளிக்கும் இந்த எவரெஸ்ட் கெய்யூ 400எக்ஸ் பைக் எஞ்ஜின் திறனில் மட்டும் மாறுபட்டு காணப்படுகின்றது.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

அந்தவகையில், எவரெஸ்ட் கெய்யூ 400எக்ஸ் பைக்கில் 378சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 36 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றது. இத்துடன், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

அதேசமயம், பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கின் எஞ்ஜின் திறனைப் பார்ப்போமேயானால், இதில் அதிகபட்சமாக 34 பிஎஸ் பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்ற வகையிலான 313 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷனில் இயங்கும்.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

மேலும், எவரெஸ்ட் கெய்யூ 400எக்ஸ் பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக, அதன் முன்பக்க வீலில் 41மிமீ அளவுகொண்ட இன்வெர்டட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

இத்துடன் பிரேக்கிங் வசதிக்காக முன்பக்க வீலில் 296 மிமீ அளவு கொண்ட ட்யூவல் டிஸ்க்கும், பின்பக்க வீலில் ட்யூவல் பிஸ்டன் காலிபர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

முன்னதாக, இதேபோன்று சீன நிறுவனம் ஒன்று லேண்ட் ரோவர் எவோக் காரின் டூப்ளிகேட் மாடலை, அந்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இந்த கார் தங்களுடைய நிறுவன தயாரிப்பை அப்படியே உறித்து வைத்திருப்பதாகக் கூறி லேண்ட் ரோவர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

டூப்ளிகேட் ஃபோன், டிவி தயாரிச்சீங்க ஓகே... கடைசில பைக்குமா... மக்களே உஷார்!!!

இதனால், அந்த காரின் விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடைவிதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது, மீண்டும் சீன நிறுவனம் பிரபல பிஎம்டபிள்யூ நிறுவனத்தன் புகழ்வாய்ந்த மாடலை டூப்ளிகேட் செய்திருப்பது உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
BMW G 310 GS Duplicate Made By Chinese. Read In Tamil.
Story first published: Saturday, July 27, 2019, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X