இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்?

கேடிஎம் 390 அட்வென்சர் பைக் மாடலின் இந்திய அறிமுக விபரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்?

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கேடிஎம் நிறுவன பைக்குகளுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இளைஞர்கள்தான் அதிகம்.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்?

இந்த சூழலில் கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்சர் (KTM 390 Adventure) மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்வென்சர் பைக் ஆர்வலர்கள் இதற்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்?

இந்த சூழலில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக் இந்திய மார்க்கெட்டில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் 390 அட்வென்சர் பைக் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்?

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் 790 பைக் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வருகிறது. எனவே 390 அட்வென்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளை கேடிஎம் முடுக்கி விட்டுள்ளது.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்?

மிலன் நகரில் நடப்பாண்டு நடைபெறவுள்ள எக்மா கண்காட்சியில், கேடிஎம் நிறுவனம் இறுதி புரொடெக்ஸன் வெர்ஷனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 எக்மா கண்காட்சி வரும் நவம்பர் 5ம் தேதி தொடங்கி 10ம் தேதி நிறைவடைகிறது.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்?

உலக அளவிலான அறிமுகத்திற்கு பிறகு இந்த பைக் உடனடியாக இந்தியாவிலும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ட்யூக் 390 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 373.2 சிசி இன்ஜின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்?

ட்யூக் 390 பைக்கில் இந்த இன்ஜின் 44 எச்பி பவர் மற்றும் 37 என்எம் டார்க் திறனை உருவாக்குகிறது. ஆனால் 390 அட்வென்சர் பைக் வித்தியாசமான ட்யூனிங் உடன் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 390 அட்வென்சர் பைக்கில், 19 இன்ச் முன் சக்கரமும், 17 இன்ச் பின் சக்கரமும் பொருத்தப்பட்டிருந்தது.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்?

கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்சர் பைக்கை, ரூ.2.8-3 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடலுடன் இது நேருக்கு நேராக போட்டியிடும். பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கின் விலை 3.49 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. (இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
BMW G 310 GS Rival KTM 390 Adventure India Launch Details. Read in Tamil
Story first published: Tuesday, June 11, 2019, 20:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X