பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஆர்1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் ரக பைக் அறிமுகம் செய்யப்பட்டன. சந்தையிலிருந்து விடைபெறும் பிஎம்டபிள்யூ 1200 ஜிஎஸ் பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த பைக் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் பைக் மாடலானது பேஸ், ஸ்டான்டர்டு, புரோ மற்றும் அட்வென்ச்சர் புரோ ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.16.85 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு ரூ.18.25 லட்சமும், புரோ மாடலுக்கு ரூ.20.05 லட்சமும், அட்வென்ச்சர் புரோ வேரியண்ட்டிற்கு ரூ.21.95 லட்சமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த வாரம் முதல் இந்த பைக்கிற்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.5 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்குகள் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

நீண்ட தூர பயணங்கள் மற்றும் கரடுமுரடான சாலை பயணங்களுக்கு ஏற்ப இந்த பைக் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. சக்திவாய்ந்த எஞ்சின், சிறந்த தொழில்நுட்ப வசதிகளை இந்த உயர் வகை அட்வென்ச்சர் ரக பைக் பெற்றிருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் லாங் டிராவல் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உயர்த்தப்பட்ட அமைப்பிலான மட்கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் கிராஷ் கார்டு, லக்கேஜ் ரேக் மற்றும் நக்குள் கார்டு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஆக்சஸெரீகள் உள்ளன. இந்த பைக் 249 கிலோ எடை கொண்டது.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பழைய மாடலைவிட 20 எடை கூடுதல். மேலும், 20 லிட்டர் பெட்ரோல் டேங்கிற்கு பதிலாக இந்த பைக்கில் 30 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் உள்ளன. ரோடு, ரெயின் என்ற ரைடிங் மோடுகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல், 6.5 அங்குல டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், செமி ஆக்டிவ் எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் உள்ளன.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

விலை உயர்ந்த அட்வென்ச்சர் புரோ வேரியண்ட்டில் கூடுதலாக டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் புரோ பிரேக்கிங் வசதி, ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல் புரோ மற்றும் டைனமிக் பிரேக் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 1254சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 136 பிஎச்பி பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உலக அளவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக பைக்குகள் சிறந்த மாடல்களாக பெயர் பெற்றிருக்கின்றன. அந்த வகையில், இந்த புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக்கும் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 19, 2019, 11:04 [IST]
English summary
BMW Motorrad India has launched the new R 1250 GS range of adventure motorcycles at a starting price of Rs 16.85 lakh ex-showroom (India). The BMW R 1250 GS comes in three variants: Standard, Adventure (Rs 20.05 lakh) and Adventure Pro (Rs 21.95 lakh).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+