பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியீடு!

இரு பெரும் கொண்டாட்டங்களை முன் வைத்து, பிம்டபிள்யூ ஆர் நைன் டி பைக்கின் சிறப்பு பதிப்பு மாடலின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியீடு!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5 சீரிஸ் மோட்டார்சைக்கிளின் உற்பத்தி துவங்கப்பட்டு 50வது ஆண்டுகள் ஆகிறது. மேலும், ஜெர்மனியிலுள்ள பெர்லின் ஸ்பன்டவ் பகுதியில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையின் 50வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி பைக்கின் விசேஷ பதிப்பு மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியீடு!

1969ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்ட பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மோட்டார்சைக்கிளின் பாரம்பரிய அம்சங்களை உள்ளடக்கியதாக புதிய ஆர் நைன் டி/5 பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சில்வர் மற்றும் கருப்பு வண்ணத்திலான உதிரிபாகங்களுடன் பழைய 5 சீரிஸ் பைக்கை நினைவூட்டும் வகையில் இந்த சிறப்பு பதிப்பு மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியீடு!

சைடு மிரர்கள், புகைப்போக்கி குழல்கள் ஆகியவற்றில் க்ரோம் பூச்சுடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த பைக் தோற்றத்தில் தனித்துவத்தை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியீடு!

அலுமினிய ஹப், ஸ்போக்ஸ் சக்கரங்கள், முன்புற ஃபோர்க்குகளில் ரப்பர் இணைப்பு ஆகியவையும் பழமையை நினைவூட்டுவதாக இருக்கின்றன. ஹீட்டட் இருக்கை, ஹேண்டில்பார் க்ரிப்புகளும் இதன் பிரிமீயம் அந்தஸ்தை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியீடு!

இந்த மோட்டார்சைக்கிளில் ஆர் நைன்டி பைக்கில் இருக்கும் அதே 1,170 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியீடு!

தோற்றத்தில் பழமையை நினைவூட்டினாலும், நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கில் ஆட்டோமேட்டிக் ஸ்டெபளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய முக்கிய பாதுகாப்பு விஷயங்களாக இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியீடு!

1960ல் பெர்லினில் மோட்டார்சைக்கிள் உருவாக்கப் பணிகளை பிஎம்டபிள்யூ மேற்கொண்டது. அத்துடன், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் வரிசையில் ஆர்50/5, ஆர்60/5, ஆர்75/5 ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியீடு!

1970களில் இந்த பைக்குகள் வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமாக விளங்கின. 1973ல் இந்த பைக்குகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மொத்தமாக 5 சீரிஸ் வரிசையில்ல 68,956 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2019, 10:31 [IST]
English summary
BMW Motorrad has unveiled special edition model of BMW R Nine T to celebrate 50th anniversary of legendary 5 series bike.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+