ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ட்வின் பைக்குகளான எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகளுக்கான புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

ஹீரோ நிறுவனம், எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய அட்வென்சர் டூரர் பைக்குகளை வருகின்ற மே 1ம் தேதியான உழைப்பாளர்கள் தினத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில், எக்ஸ்பல்ஸ் 200 மாடல் ஆஃப் ரோடில் பயன்படுத்தும் வகையிலும், எக்ஸ்பல்ஸ் 200டி மாடல் ஆன்-ரோடில் பயன்படுத்தும் ஹார்ட்கோர் மாடலாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

இவை இரண்டும் நாளை மறுதினம் அறிமுகமாக இருக்கின்ற நிலையில், ஹூரோ நிறுவனத்தின் டீலர்கள் சிலர் ஏற்கனவே இந்த பைக்குகளுக்கிற்கான புக்கிங்கை தொடங்கியிருப்பதாக ஜிக்வீல்ஸ் ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், இந்த பைக்குகளை உங்கள் கராஜில் சேர்த்துக்கொள்ள நினைப்பவர்கள் ரூ.5 ஆயிரம் முன் பணமாக செலுத்தி ப்ரீ புக்கிங்கை செய்து கொள்ளலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

அதேசமயம், இந்த மோட்டார்சைக்கிள்களின் அதிகாரப்பூர்வமான விலை குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இவை இரண்டும் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

ஹீரோ நிறுவனம் வெளியிடும் இந்த மாடல் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 400 மோட்டார்சைக்கிள் மட்டும்தான் உள்ளது. ஆனால், இதன் விலை ரூ. 2 லட்சமாக இருக்கின்றது. மேற்கூறியபடி, இவை மலிவான விலையில் விற்பனைக்கு வந்தால் கணிசமான அளவில் விற்பனையை அள்ளிக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் சற்று உயரமாக சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ப கிரவுண்ட் கிளியரன்ஸ் 30எம்எம் ஆக வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளில் செல்வதற்கு ஏற்ப சைலென்சர் சற்று உயரமாக பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

இத்துடன், மோட்டார்சைக்கிளின் முன்பக்கத்தில் 21 இன்ச் கொண்ட ஸ்போக்ஸ் வீலும், பின்பக்கத்தில் 18 இன்ச் கொண்ட ஸ்போக்ஸ் வீலும் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில் பாதுகாப்பு அம்சமாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

இதையடுத்து, சிறந்த பயண அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில், முன்பக்கத்தில் 190எம்எம் உயர டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 170எம்எம் உயர மோனோசாக்ஸும் பொருத்தப்பட்டுள்ளன. ஆகையால், இது ஆஃப் ரோடு பயணத்தின்போது ரைடர்களுக்கு சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

டூரிங் வெர்ஷனான எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிளில், 17 இன்ச் கொண்ட அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் 30mm-ஆக உள்ளது. இதன் ஹேண்டில்-பார்கள் எக்ஸ்பல்ஸ் 200 மாடலைக் காட்டிலும் சற்று தாழ்வாகவும், நேராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளுக்கான புக்கிங் தொடக்கம்: விபரம் உள்ளே!

மேலும், எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள் பிரேக் உள்ளிட்ட சில பாகங்களை எக்ஸ்பல்ஸ்200 பைக்குடன் பகிர்ந்து கொள்கிறது. அந்தவகையில், இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, 18.4 பிஎஸ் பவரையும், 17.1 என்எம் டார்க் திறனை வழங்கும் 199.5 சிசி கொண்ட ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின்தான் இவை இரண்டிலும் பொருத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, April 29, 2019, 17:32 [IST]
English summary
Bookings Open For The New Hero XPulse Twin Bike. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+