கேடிஎம் ஆர்சி390, அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகளுக்கு செம்ம டஃப் கொடுக்கபோகும் புதிய பைக் இதுதான்..!
சிஎஃப் மோட்டோ நிறுவனம், கேடிஎம் ஆர்சி390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 உள்ளிட்ட மாடல் பைக்குகளுக்கு போட்டியாக இந்தியாவில் விரைவில் ஸ்போர்ட் ரகத்திலான புதிய பைக்கை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான சிஎஃப் மோட்டோ இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக நான்கு புத்தம் புதிய மாடல்களை தொடர்ச்சியாக களமிறக்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, அந்நிறுவனம் கூடுதலாக அழகூட்டப்பட்ட ஸ்போர்ட்ஸ்ரக பைக்கை களமிறக்க திட்டமிட்டு வருகின்றது. இது, கேடிஎம் ஆர்சி390 பைக்குடன் கடுமையான போட்டியைச் சந்திக்க இருக்கின்றது.

அந்தவகையில், சிஎஃப் மோட்டோ நிறுவனம் 300எஸ்ஆர் என்ற புதிய மாடலைத்தான் அடுத்த வருடம் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இதனை, அந்நிறுவனம் அதன் கான்செப்ட் மாடலான சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் மாடலைத் தழுவி உருவாக்கியிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த 250எஸ்ஆர் மாடலை அது நடப்பாண்டின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்திருந்தது.

இந்த கான்செப்ட் மாடல் பார்ப்பதற்கு குவாட்டர் லிட்டர் தோற்றத்தில் ஸ்லீக் மற்றும் ஸ்போர்ட்டி மாடலில் காட்சியை வழங்கியது. அதற்கேற்பவகையில், அந்த பைக்கில் அக்ரபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் டயர்கள் இணைக்கப்பட்டிருந்தன.
தற்போது, இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் 300எஸ்ஆர் மாடல் இதனைக் காட்டிலும் சற்று பெரிய அளவிலான 300சிசி எஞ்ஜினைப் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த அப்கமிங் மாடலில் 292.4சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது, 300என்கே நேக்கட் ரக ஸ்ட்ரீட்பைட்ட மாடலுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும். இந்த நேக்கட் ரக மாடலை சிஎஃப் நிறுவனம் வருகின்ற ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது.

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்ஜின் 34 பிஎஸ் பவரையும், 20.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் பன்தன்மைக் கொண்ட ரைடிங் மோட்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், இந்த புதிய வரவாக இருக்கும் அழகுமிக்க ஸ்போர்ட்ஸ் மாடல் பைக், பெரும்பாலும் 300என்கே ஸ்ட்ரீபைட்டர் மாடலின் உடற்கூறுகளையேப் பெற இருக்கின்றது.

அந்தவகையில், வாகன ஓட்டியின் சிறப்பான பயண அனுபவத்திற்காக அப்சைட் டவுண் அமைப்பிலான சஸ்பென்ஷன் முன்பக்கத்திலும், மோனோசாக் சஸ்பென்ஷன் பின்பக்கத்திலும் பொருத்தப்பட உள்ளது. இத்துடன், இந்த மோட்டார்சைக்கிளில் டிஎஃப்டி டிஸ்பிளே பொருத்தப்பட உள்ளது. இதே, டிஸ்பிளேதான் 250 எஸ்ஆர் மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், பைக்கின் சிறப்பான பிரேக்கிங் அமைப்பிற்காக 4-பாட் காலிபர் கொண்ட ப்ரெம்போ பிரேக்குகளை இந்த பைக்கிற்கு வழங்க இருக்கின்றது. இந்த பிரேக்கிங் முறையின் சிறப்பான கட்டமைப்பு, வாகன ஓட்டியின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கின்றது. இத்துடன் பைக்கின் உறுதியான கட்டமைப்பிற்காக, ஸ்டீலிலான ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் அலுமினியம் ஸ்விங்ரம் யூனிட்டுகளைக் கொண்டு பைக்கின் பாடி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதன் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் மட்டும் சற்று மாற்றம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், கான்செப்ட் மாடலில் இருக்கும் அக்ரபோவிக் சிஸ்டத்திற்கு பதிலாக அந்தநிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்சாஸ்ட் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, கார்பன் ஃபைபர் பெட்ரோல் டேங்கிற்கு பதிலாக, ஸ்டாண்டர்டு ப்யூவல் டேங்க் பொருத்தப்பட இருக்கின்றது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், பைக்கின் அதிக விலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள், கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி390 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அடுத்த வருடம் களமிறங்க இருக்கின்றது. இதற்கு முன்னதாக சிஎஃப் நிறுவனம், அதன் புத்தம் புதிய 4 மாடல்களை அடுத்த வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
Images are representation purpose only


Click it and Unblock the Notifications








