இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் சிஎஃப் மோட்டோ அட்வென்ச்சர் பைக்!
சீன தயாரிப்பான சிஎஃப் மோட்டோ 650 எம்டி சாகச ரக பைக் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் கால் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, தனது 250 என்கே என்ற ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக பைக் மாடலை இந்திய சாலைகளில் வைத்து சோதனை நடத்தியது குறித்த படங்களும், செய்தியும் வெளியானது.

இந்த நிலையில், தற்போது 650 எம்டி என்ற அட்வென்ச்சர் ரக பைக் மாடலையும் இந்தியாவில் வைத்து ரகசியமாக சாலை சோதனைகள் நடத்தி வருகிறது சிஎஃப் மோட்டோ நிறுவனம்.

அடையாளங்கள் முற்றிலும் மறைக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650 எம்டி பைக் ஹைதராபாத் சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அதன் ஸ்பை படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

ஹைதராபாத்தை சேர்ந்த மஹாவீர் ஆட்டோ- ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனம்தான் இந்த புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பைக்கில் பெரிய விண்ட் ஷீல்டு அமைப்பு மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகளை காண முடிகிறது. அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.

புதிய சிஎஃப் மோட்டோ 650 எம்டி பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 649.3 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 56 பிஎச்பி பவரையும், 62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் முன்புறத்தில் 2 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 300 மிமீ ட்வின் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய பைக் மாடல் ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுஸுகி வி - ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி, கவாஸாகி வெர்சிஸ் 650 உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டிபோடும்.
Source: Carblogindia


Click it and Unblock the Notifications








