அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

சீனாவை சேர்ந்த சிஎஃப்மோட்டோ நிறுவனம் அடுத்த மாதம் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

சீனாவை சேர்ந்த சிஎஃப்மோட்டோ நிறுவனம் ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பில் அந்நாட்டில் சிறந்து விளங்குகிறது. இந்தநிலையில், இந்திய சந்தையில் கால் பதிப்பதற்கான முயற்சிகளை சிஎஃப்மோட்டோ இறங்கியது. கடந்த சில மாதங்களாக தனது பைக் மாடல்களை இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வுகள் செய்து வருகின்றது.

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

இந்த நிலையில், அடுத்த மாதம் சிஎஃப்மோட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது பைக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஸிக்வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. முதலில் மூன்று மாடல்களை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

அறிமுக விழாவில் மொத்தம் 5 மாடல்களை இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் ஸிக்வீல்ஸ் தளத்திடம் தெரிவித்துள்ளார். சிஎஃப்மோட்டோ நிறுவனத்தின் 300NK, 650NK, 650MT, 400NK, 650GT ஆகிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

இதில், சிஎஃப்மோட்டோ 300NK மாடல்தான் முதலாவது மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதனுடன் சேர்த்து 650NK மற்றும் 650MT மாடல்களும் விற்பனைக்கு களமிறக்கப்படும்.

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

பிற மாடல்களான 400NK மற்றும் 650GT ஆகிய இரு மாடல்களும் தீபாவளிக்கு முன்னதாக பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில், முதலாவதாக வரும் 300NK மாடலானது பிஎம்டபிள்யூ ஜி310ஆர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட 250NK மாடலில் இருக்கும் 249.2சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினை போர் செய்து இந்த பைக்கில் 300சிசி எஞ்சினாக சிஎஃப்மோட்டோ நிறுவனம் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

அடுத்து, 650சிசி ரோட்ஸ்டெர் மாடலில் இருக்கும் 649.3சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 61.1 பிஎஸ் பவரையும், 56 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டூரர் மாடலில் இருக்கும் இதே எஞ்சின் அதிகபட்சமாக 70.7 பிஎஸ் பவரையும், 62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

பெங்களூரை சேர்ந்த AMW நிறுவனத்துடன் கூட்டடணி அமைத்து இந்தியாவில் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது சிஎஃப்மோட்டோ நிறுவனம். மேலும், ஹைதராபாத்தில் உள்ள AMW நிறுவனத்தின் ஆலையில் இந்த பைக்குகள் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டது முதல் 60 நாட்களில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும்.

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் சிஎஃப்மோட்டோ பைக்குகள்!

கேடிஎம், பெனெல்லி, கவாஸாகி உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் மாடல்களுடன் சிஎஃப்மோட்டோ நிறுவனத்தின் பைக்குகள் போட்டி போடும். போட்டியாளர்களைவிட விலையை சவாலாக நிர்ணயிக்கும் திட்டமும் சிஎஃப்மோட்டோவிடம் இருக்கிறதாம். எனவே, சந்தைப் போட்டி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Source: Zigwheels

Most Read Articles
English summary
Chinese two wheeler company, CFMoto is all set to enter the Indian market next month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X