அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

அடுத்ததாக புதிய 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சிஎஃப் மோட்டோ. அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய பைக்கின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் இந்தியாவில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகத்தை துவங்கியுள்ளது. கடந்த மாதம் 300 என்கே, 650 என்கே, 650 எம்டி மற்றும் 650 ஜிடி ஆகிய 4 பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

இந்த நிலையில், அடுத்து ஒரு புத்தம் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு சிஎஃப் மோட்டோ - ஏஎம்டபிள்யூ கூட்டணி திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் சீனாவில் காட்சிக்கு கொண்டு வரப்பட்ட சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் என்ற அந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்கையே இந்தியாவில் அடுத்து அறிமுகம் செய்வதற்கு இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சிஎஃப்மோட்டோ 250 என்கே பைக்கின் அடிப்படையிலான ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இந்த புதிய 250 எஸ்ஆர் பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

புதிய சிஎஃப்மோட்டோ 250 எஸ்ஆர் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஏர் வென்ட்டுகள் மற்றும் கச்சிதமான பெட்ரோல் டேங்க் என மிக சிறப்பான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. உயரமான இருக்கை அமைப்பு, தாழ்வான கைப்பிடியுடன் சிறந்த ஓட்டுதல் உணர்வை இந்த ஸ்போர்ட்ஸ் பைக் தரும். வளைவுகளில் திருப்பும்போது மிக சிறந்த கையாளுமையையும், நிலைத்தன்மையும் வழங்கும்.

அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

புதிய சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய வண்ணத் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வேகம், ட்ரிப் மீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், எரிபொருள் மானி, டாக்கோ மீட்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

புதிய சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் பைக்கில் ஸ்போர்ட் மற்றும் ரெயின் என்ற இரண்டு விதமான ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, ஓட்டுனர் விருப்பத்தின்பேரிலும், நிலைமைக்கு தக்கவாறும் எஞ்சின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

புதிய சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் பைக்கில் 249.2 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் எலெக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

புதிய சிஎஃப்மோட்டோ 250 எஸ்ஆர் பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிபிஆர் 250ஆர், சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மற்றும் கேடிஎம் ஆர்சி 200 பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ!

சிஎஃப் மோட்டோ நிறுவனம் சீனாவில் கேடிஎம் நிறுவனத்தின் கூட்டணியில் இணைந்து வர்த்தகம் செய்து வருகிறது. மேலும், கேடிஎம் பைக்குகளின் டிசைன் உரிமத்தை பெற்று பைக்குகளை வடிவமைத்து வருகிறது. இதனால், கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் கேடிஎம் பைக்குகளின் சாயல் பிரதிபலித்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2019, 11:45 [IST]
English summary
CFMoto is planning to launch of its 250SR quarter liter sports bike in India by early next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+