இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்!

சிஎஃப் மோட்டோ இந்தியாவில் நான்கு புதிய மாடல் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பைக்குகள் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் சிஎஃப் மோட்டோ நிறுவனம், அதன் தயாரிப்புகள் மூலம் இந்திய இருசக்கர வாகன உலகில் ஆதிக்கம் செலுத்த இருக்கின்றது. இதற்கான பணிகளில் அந்த நிறுவனம் அதிதீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில், வருகின்ற ஜூலை மாதத்திற்குள் நான்கு புத்தம் புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

அதில், சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் பைக்குகளான 300 என்கே, 650என்கே, 650எம்டி மற்றும் 650ஜிடி ஆகிய மாடல்கள் முதற்கட்டமாக களமிறக்கப்பட உள்ளன. இந்த பைக்குகளை விற்பனைச் செய்வதற்காக ஏதுவாக, இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் ஷோரூம்கள் நிறுவும் நடைபெற்று வருகின்றது. அவ்வாறு, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், மும்பை, கோவா மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் ஷோரூம்கள் ஏற்கனவே ஷோரூம்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

அதேபோனறு, சிஎஃப் மோட்டோ நிறுவனம் அதன் தயாரிப்புகளை, இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்தே அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகையால், ஏஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு சொந்தமான பெங்களூரு பிளாணட்டில் வைத்து சிஎஃப் மோட்டோ பைக்குள் தயார் செய்யப்பட உள்ளன. இந்த பிளாணட்டானது, ஆண்டிற்கு 10 ஆயிரம் யூனிட்களை தயாரிக்கும் அளவிற்கு வசதி கொண்டது.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

சிஎஃப் மோட்டோ நிறுவனம், இந்தியாவில் நுழைய முயற்சிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக கடந்த 2016ம் ஆண்டே அந்த நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதிக்க முயற்சித்தது. இதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த எய்டர் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. ஆனால், இந்த நிறுவனம் போலியானது, என அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனம், கூட்டணியில் பின் வாங்கியது. மேலும், பைக்குகளின் அறிமுகத்தையும் பின் வாங்கிக்கொண்டது.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

சிஎஃப் மோட்டோ நிறுவனம் களமிறக்கும் பைக்குகளிலேயே 300என்கே மாடல்தான் மிகவும் மலிவான விலை கொண்ட பைக்காக இருக்கின்றது. ஸ்ட்ரீட் பைட்டர் ரகத்தில் தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த பைக்கில், 292.4சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 34எச்பி பவரையும், 20.5 என் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இத்துடன், இந்த பைக்கில் இரண்டு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, ஸ்போர்ட் மற்றும் மழை ஆகும்.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

மேலும், நவீன மற்றும் தொழில்நுட்ப அம்சங்களாக 300என்கே பைக்கில், டிஎஃப்டி கலர் டிஸ்பிளே, எல்இடி மின் விளக்குகள் மற்றும் ரியர் வீல் ஹஃகர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கேடிஎம் 250 ட்யூக் மற்றும் ஹோண்டா சிபி300ஆர் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

இதைத்தொடர்ந்து களமிறக்கப்படும் மற்ற அனைத்து பைக்குகளும் ஒரே திறன் கொண்ட பைக்குகளாக இருக்கின்றன. அந்தவகையில், அவையனைத்தும் 649.3சிசி திறன்கொண்ட ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜினைப் பெற்றுள்ளன. இதில், நேக்கட் ரக 650 என்கே மாடல் பைக் 61எச்பி பவரையும், 56 என்எம்டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையிலான ட்யூன்-அப்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

அதேபோன்று, அட்வென்டர் டூரர் மாடலாக இருக்கும் 650எம்டி பைக், 70.7 எச்பி பவரையும், 62 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்ற ட்யூனிங்கைக் கொண்டுள்ளது. அதேசமயம், இந்த பைக் 650 என்கே மாடலைக் காட்டிலும் சற்று கூடுதல் அம்சங்கள் கொண்ட பைக்காக இருக்கின்றது. அந்தவகையில், அதன் கெர்ப் எடை 213 கிலோவாக இருக்கின்றது. அதுவே 650என்கே மாடலின் எடையைப் பார்த்தோமேயானால், 206 கிலோவாக இருக்கின்றது.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

650எம்டி பைக்கின் அதிக எடைக்கு, அதில் கூடுதலாக பொருத்தப்பட்டிருக்கும் பாகங்களே காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த கூடுதல் பாகங்களால்தான் இந்த பைக் அட்வென்சர் டூரர் பைக்கின் லுக்கைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், இந்த பைக்கில் ஹேண்ட் குவார்ட் மற்றும் சிங்கிள்-பீஸ் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்...!

இதேபோன்று, 650ஜிடி பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 649.3சிசி திறன் கொண்ட சிங்கிள் ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் 62.5 எச்பி பவரையும், 58.5 எம்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இந்த பைக் குறித்த அதிகாரப்பூர்வமான வெளியாகவில்லை. அவை, பைக்கின் விற்பனை அறிமுகத்தின்போது அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2019, 11:02 [IST]
English summary
CF Moto Readies Four Motorcycles For July 2019 Launch — The Chinese Invasion. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+