ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா.. பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்

பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலானதால் போலீஸார் ஒருவர் வசமாக சிக்கியுள்ளார். இதுகுறித்த தகவலை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

இந்தியாவில் ஹாட் டாபிக்காக புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் மாறியிருக்கின்றது. இதற்கு முன்பாக வாகனத்துறையின் மந்த நிலை மற்றும் வீழ்ச்சி மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வந்தநிலையில், அதன் இடத்தை திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் பிடித்துள்ளது.

இதற்கு, அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஏனென்றால், புதிய விதி, முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கு வழி வகை செய்துள்ளது.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

முன்பு ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தை இயக்குபவர்களிடம் வசூலித்து வந்த ரூ. 100 அபரதாம் தற்போது ஆயிரம் ரூபாயாக மாறியுள்ளது. இதேபோன்று, போக்குவரத்து சட்டத்தில் உள்ள 63 விதிகளுக்கான அபராதமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

எனவே, வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு நொடியும், ஒருவிதமான அச்ச உணர்வோடு பயணித்து வருகின்றனர்.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

இதற்கும் முக்கிய காரணம் உண்டு. சமீபகாலமாக, அதாவது செப்டம்பர் 1ம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து போலீஸார் தீவிர வேட்டையை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை குறி வைத்து தங்களின் ஆட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

மேலும், வாகன விதிமீறலில் ஈடுபடுவது அறியப்பட்டால், உடனுக்குடனே அவர்களுக்கு கடுமையான அபராதத்திற்கான செல்லாணை, எந்தவொரு பாரபட்சமுமின்றி வழங்குகின்றனர்.

அந்தவகையில், ஹரியானா மாநில போலீஸார், டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்ற இளைஞருக்கு ரூ. 24 ஆயிரத்திற்கான அபராத செல்லாணை வழங்கினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

அவரின் ஸ்கூட்டர் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி அம்மாநில போலீஸார், இத்தகைய உச்சபட்ச அபராதத்தொகையை வழங்கினர். இதேபோன்று, அதிக அபராதத் தொகை வழங்கும் சம்பவம் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

இந்நிலையில், விதிகள் என்பது அனைவருக்கும் சமம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸார், தலைக்கவசம் அணியாமல் ஸ்கூட்டரை இயக்கியவாறு செல்போன் பேசிய குற்றத்திற்காக அபராதச் செல்லாணைப் பெற்றுள்ளார்.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

விதிகளை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர், விதிமீறலில் ஈடுபடும்போது சாதாரண மக்களைக் காட்டிலும் இருமடங்கு அதிக அபராதத்தொகையை செலுத்த வேண்டும் என்பதை ஒரு சில மாநிலங்கள் கடைபிடித்து வருகின்றன.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

அந்தவகையில், தற்போது போக்குவரத்து விதிமீறில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிக்கு ரூ. 10 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

போலீஸார் செய்த விதிமீறல்குறித்த வீடியோ, டுவிட்டரில் வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீனா சவுத்ரி என்ற டுவிட்டர் பயனாளர் பதிவிட்டுள்ளார். இதனை நீங்கள் கீழே காணலாம்...

இந்த காவல் அதிகாரிக்கு இரு விதிகளின்கீழ் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அவருக்கு காலாவதியான காப்பீடு மற்றும் செல்போனில் பேசிக் கொண்டே ஸ்கூட்டரை இயக்கியது ஆகிய இரு குற்றங்களுக்காக மட்டும் அபராதச் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

ஆனால், அவர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. இதற்கான அபராதம் அவருக்கு வழங்கப்படவில்லை. ஏனென்றால், தலைப்பாகை அணியும் சீக்கியர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

இதன்காரணமாக, பஞ்சாப் மாநில போக்குவரத்து அதிகாரிக்கு ஹெல்மெட் அணியாததற்கான அபராதம் விதிக்கவில்லை. இதில், காலாவதியான காப்பீட்டிற்கு ரூ. 4 ஆயிரமும், வாகனத்தை இயக்கிக்கொண்டே செல்போன் பேசியதற்காக ரூ. 6 ஆயிரமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேகுற்றங்களைச் சாதாரண குடிமகன்கள் செய்திருந்தால் பாதியளவு மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்கும்.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

காவல்துறையினர் இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்டு தண்டிக்கப்படுவது முதல் முறையல்ல. முன்னதாக, சென்னை, தி-நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

இதேபோன்று, சீட் பெல்ட் அணியாமல் வந்த போலீஸாரை மடக்கிய பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம்கூட அண்மையில் இந்தியாவில் அரங்கேறியது. இது தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

ஸ்கூட்டரில் சென்ற போலீஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா... பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சிக்கல்!

இவ்வாறு, விதிமீறலில் ஈடுபடும் போலீஸாருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொள்வது, மக்கள் மத்தியில் மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், நாட்டில் இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமீறல் என்ற ஓர் செயலே இல்லாமல் போய்விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Article Published On: Monday, September 9, 2019, 15:33 [IST]
English summary
Cop Fined For Talking On Mobile While Riding Scooter. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+