இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

தமிழக அரசு எடுத்துள்ள ஒரு அதிரடியான நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

ஹெல்மெட் அணியாததே இதற்கு முக்கியமான காரணம் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தும் கூட நம்மில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவது கிடையாது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

ஆனால் இந்தியாவின் ஒரு சில நகரங்களை தவிர பெரும்பாலான இடங்களில் இந்த விதிமுறை முறையாக பின்பற்றப்படுவது கிடையாது. தமிழகத்தை எடுத்து கொண்டால், இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

இந்த விஷயத்தில் சென்னை ஐகோர்ட் கூட சமீபத்தில் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவரால் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி, சாலை விபத்துக்களால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ராஜேந்திரன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

இந்த வழக்கு கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு பெங்களூர், டெல்லி போன்ற நகரங்களில் கடுமையாக பின்பற்றப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஏன் இதனை செய்ய முடியவில்லை? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

இதனை தொடர்ந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன் விளைவாக புதிய டூவீலர்களை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன் விதி 138 (4) (f)-ன்படி புதிதாக இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு, இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards - BIS) வழங்கியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் ஹெல்மெட் வழங்கப்பட வேண்டும்.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

தமிழக அரசு தற்போது இதனை கையில் எடுத்துள்ளது. அடுத்தமுறை தமிழகத்தில் உள்ள ஷோரூம்களில் நீங்கள் புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கினால், நீங்கள் தேர்வு செய்தாலும் செய்யாவிட்டாலும் உங்களுக்கு இரண்டு ஹெல்மெட்கள் கிடைக்கும்.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

புதிதாக இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட்களை வழங்குவது என்பது டீலர் அல்லது இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களின் பணி. தமிழகத்தில் தற்போது இந்த விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதமே இரு சக்கர வாகன டீலர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை கடிதம் எழுதி விட்டது. ஆனால் ஹெல்மெட்களை கொள்முதல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் அப்போது டீலர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

இந்த சூழலில் ஹெல்மெட் விவகாரத்தில் டீலர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக போக்குவரத்து துறை கமிஷனர் சமயமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். எனவே இனி புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் அனைவருக்கும் இரண்டு ஹெல்மெட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

தமிழக அரசின் இந்த நடவடிக்கை புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் பொதுமக்கள் மத்தியிலும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

முன்னதாக தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் இதே நடவடிக்கையை எடுக்க அம்மாநில அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவிற்கே முன்மாதிரியான ஒரு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Dealers To Give Helmets To Two-Wheeler Customers In Tamil Nadu. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X