அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

டுகாட்டி நிறுவனம், அதன் டியாவல் வரிசையில் உள்ள அழகுமிகுந்து இரு மாடல்களை விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

இத்தாலிய நாட்டைச்சார்ந்த சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி அதன் டியாவல் வரிசையில் இரண்டு புத்தம் புதிய மாடல் பைக்குகளை இந்தியாவிற்கு அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில், டியாவல் 1260 மற்றும் 1260எஸ் ஆகிய இரு மாடல்களை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிமுகம் செய்தது.

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

இதில், டுகாட்டி டியாவல் 1260 மாடலுக்கு ரூ. 17.70 லட்சம் என்ற விலையும், 1260 எஸ் மாடலுக்கு ரூ. 19.25 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். புதிய டுகாட்டி டியாவல் 1260 மாடலுக்கு பல்வேறு புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், முன்பிருந்த மாடல்களைக் காட்டிலும் கூடுதல் திறன், சிறப்பான உடல் கட்டமைப்பு உள்ளிட்டவை இந்த மாடல் பெற்றிருக்கின்றது.

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

டுகாட்டியின் இந்த புத்தம் புதிய மாடலான 1260 மாடலுக்கு தற்போது புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, கொச்சி, அஹமதாபாத், சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள டீலர்கள்மூலம் இந்த புக்கிங் நடைபெற்று வருகின்றது.

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த பைக்கின் அறிமுகம்குறித்து டுகாட்டி நிறுவனத்திற்கான இந்திய இயக்குநர் செர்கி கேனோவஸ் கூறியதாவது, "டியாவல் பைக்கின் அறிமுகம், இந்தியாவில் ஓர் புதிய இடத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் க்ரூஸர் ரக பைக்கின் புதிய அவதாரமாக காட்சியளிக்கும். மேலும், மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை இந்த பைக்கின் திறன் மற்றும் தோற்றம் பூர்த்தி செய்யும்" என்றார்.

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

மேலும், பேசிய அவர், "புதிய டியாவல் 1260 பைக்கின் சிறப்பம்சங்கள், அதன் முந்தைய மாடலைக் காட்டிலும் ஒரு படி மேலே இருக்கின்றது. இதன், நேக்கட் ஸ்டைல் மற்றும் பவர் க்ரூஸர் ஓர் மிகப் பெரிய மான்ஸ்டரைப் போன்று நமக்கு காட்சியளிக்கும். ஆகையால், இந்தியாவில் அதிகம் விரும்பக்கூடிய பவர் க்ரூஸர் பைக்குகளில் முதன்மை இடத்தைப் பிடிக்கும்" என தெரிவித்தார்.

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

டுகாட்டி டியாவல் 1260 பைக்கில் 1,262 சிசி திறனை வெளிப்படுத்தும் ட்வின் சிலிண்டர் டெஸ்டஸ்டரெட்டா எஸ்விடி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக, 9,500 ஆர்பிஎம்மில் 159 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 129 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

MOST READ: மாஸ் காட்டப்போகும் தமிழக அரசு... இன்னும் மூன்றே வாரங்களில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு இதுதான்...

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

இத்துடன், இந்த எஞ்ஜினில் சிறப்பம்சமாக, டெஸ்மோட்ராமிக் வால்வ் டைமிங் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதில், எஞ்ஜினின் அனைத்து இயக்க நேரத்திலும் சிறப்பான டார்க்கை வெளிப்படுத்த உதவும். மேலும், இந்த பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

அந்தவகையில், 6-ஆக்ஸிஸ் போஸ்ச் இன்டீரியல் மெசர்மெண்ட் யூனிட், போஸ்ச் கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி டிராக்சன் கன்ட்ரோல், டுகாட்டி வீலி கன்ட்ரோல், பவர் லான்ச், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பன் தன்மை வாய்ந்த ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை இந்த பைக்கின் கூடதல் சிறப்பு அம்சங்களாக இருக்கின்றன.

MOST READ: 'தி ராக்' எத்தனை கார்களை வைத்திருக்கிறார் தெரியுமா...? வெளியுலகிற்கு வராத மலைக்க வைக்கும் தகவல்கள்..

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

இதேபோன்று, டுகாட்டி டியாவல் 1260 எஸ் மாடலில் ஸ்டாண்டர்டு திறன் கொண்டு அப்/டவுண் குயிக் ஷிஃப்டர், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டுகாட்டி மல்டிமீடிய சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில், மல்டி மீடியா சிஸ்டத்தை ப்ளூடூத் அம்சம் மூலம் ஸ்மார்ட்போனை கனெக்ட் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

டியாவல் 1260 பைக் ஒரே ஒரு பெயிண்ட் ஸ்கீமில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றது. அவ்வாறு, அது கருப்பு நிற ஃபிரேம்களைக் கொண்டு சேண்ட் ஸ்டோன் நிறத்தில் மட்டுமே கிடைக்க உள்ளது. ஆனால், டியாவல் 1260 எஸ் மாடல் இருவிதமான வண்ணத் தேர்வில் கிடைக்க உள்ளது. அந்தவகையில், கருப்பு மற்றும் டார்க் ஸ்டீல்த் நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

டுகாட்டி நிறுவனத்தின் இந்த டியாவல் சர்வதேச சந்தையில் மிக சிறப்பா வாய்ந்த மாடலாக பார்க்கப்படுகின்றது. அதற்கு இந்த பைக்கின் சிறப்பான தோற்றமும், அதீதி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினுமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன்காரணமாக, இந்த மாடல் பைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ரெட் டாட் டிசைன் விருதில் பங்கேற்று, முதல் பரிசை டியாவல் பைக் தட்டிச் சென்றது.

அதிக ஸ்டைலான மாடலை இந்தியாவில் களமிறக்கிய டுகாட்டி... விலை எவ்வளவு தெரியுமா...?

இத்தகைய சிறப்பு வாய்ந்த பைக்கைதான் டுகாட்டி நிறுவனம், இந்தியாவில் நேற்று களமிறக்கியது. இது இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
New Ducati Diavel 1260 Launched In India With A Starting Price Of Rs 17.70 Lakh. Read In Tamil.
Story first published: Saturday, August 10, 2019, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X