ரெட் டாட் டிசைன் விருது பெற்ற டியாவல் வரிசையில் கூடுதலாக புதிய மாடலை அறிமுகம் செய்த டுகாட்டி...!

பிரபலமான டியாவல் வரிசையில் புதிய மாடல் மோட்டார்சைக்கிளை டுகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரெட் டாட் டிசைன் விருது பெற்ற டியாவல் வரிசையில் கூடுதலாக புதிய மாடலை அறிமுகம் செய்த டுகாட்டி...!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், தனது பிரபல மாடலான டியாவல் வரிசையில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் மாடல் க்ரூஸர் மோட்டார்சைக்கிளினை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதற்கு, டயாவல் 1260 எஸ் மேடெரிகோ என்ற பெயரை அந்த நிறுவனம் வைத்துள்ளது.

ரெட் டாட் டிசைன் விருது பெற்ற டியாவல் வரிசையில் கூடுதலாக புதிய மாடலை அறிமுகம் செய்த டுகாட்டி...!

இந்த புதிய சிறப்பு மாடலானது, டியாவல் வரிசையில் வந்திருக்கும் மற்ற மாடல்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக இருக்கும் வகையில், சில சிறப்பு மாற்றங்களைப் பெற்றுள்ளது. அவ்வாறு, தற்போது வெளிவந்துள்ள இந்த டியாவல் 1260 எஸ் மேட்ரிகோ மோட்டார்சைக்கிள் 'மிலான் டிசைன் வாரம்' என்ற விழாவை இத்தாலியில் கொண்டாடி வருகிறது.

ரெட் டாட் டிசைன் விருது பெற்ற டியாவல் வரிசையில் கூடுதலாக புதிய மாடலை அறிமுகம் செய்த டுகாட்டி...!

இந்த புதிய மாடல் மோட்டார்சைக்கிளை கவர்ச்சியாகவும், ரம்மியாகவும் உருவாக்கும் பணியில் பல முன்னணி நிறுவனங்களின், முக்கிய நபர்களின் பங்கு இடம்பெற்றுள்ளது. அவ்வாறு, ஆன்ட்ரியா பெர்ராரெஸி (டுகாட்டி), மிட்ஜா போர்கெட் (லேம்போரகினி), பைரோ மிஸானி (பைரெல்லி) மற்றும் விடபிள்யூ டிசைன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வால்டர் டி சில்வா ஆகியோர் இணைந்து இதன் டிசைனுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

ரெட் டாட் டிசைன் விருது பெற்ற டியாவல் வரிசையில் கூடுதலாக புதிய மாடலை அறிமுகம் செய்த டுகாட்டி...!

இதைத்தொடர்ந்து, இந்த மோட்டார்சைக்கிளின் பிரத்யேகமான தோற்றத்திற்காக பல முக்கிய அம்சமான மெட்டீரியல்கள் இதில் பொறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, இந்த மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்க் உள்ளிட்ட பக்கவாட்டு பகுதியில் கார்பன் ஃபைபர் பக்கவாட்டு பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, இதன் சீட்டில் ஸியூட்-ஸ்டைல் மெட்டீரியல் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், சீட் மற்றும் ஏர் இன்டேக்கரை எடுப்பாக காட்டும் வகையில் மஞ்சள் நிற ஹைலைட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட் டாட் டிசைன் விருது பெற்ற டியாவல் வரிசையில் கூடுதலாக புதிய மாடலை அறிமுகம் செய்த டுகாட்டி...!

இது, அந்த மோட்டார்சைக்கிளின் கவர்ச்சியை மேலும் கூட்டும் வகையில் இருக்கிறது. மேலும், மோட்டார்சைக்களில், யூனிக்கான 10 ஸ்போக்குகளைக் கொண்ட அலாய் வீல்கள் முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், டிஎஃப்டி எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஹேண்ட்ஸ் ஃப்ரீ இக்னீசன், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் புளுடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ரெட் டாட் டிசைன் விருது பெற்ற டியாவல் வரிசையில் கூடுதலாக புதிய மாடலை அறிமுகம் செய்த டுகாட்டி...!

டுகாட்டியின் இந்த புத்தம் புதிய டயாவல் 1260எஸ் மெட்ரிகோ மாடலில் 1262சிசி கொண்ட எல்-ட்வின் டெஸ்டாஸ்ட்ரெட்டா எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 159 பிஎச்பி பவரையும், 129 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன் பக்கத்தில் 50 எம்எம் கொண்ட அப்சைட்-டவுண் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 48 எம்எம் கொண்ட மோனாசாக் அப்சார்பரும், ப்ரீ-லோட் அட்ஜஸ்டபிள் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு சஸ்பென்ஷன்களும் ஓஹ்லின்ஸ் என்னும் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் பெரியளவிலான 1,262சிசி, லிக்யூட்-கூல்ட், வி-டிவின் மோட்டார் சர்னிங் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 159 குதிரை திறனை 9,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. அதேபோன்று, 129என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இதில் டெஸ்மோடிரோமிக் வேரியபில் டைமிங் என்னும் புதிய பவர் பிளாண்ட் அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.

ரெட் டாட் டிசைன் விருது பெற்ற டியாவல் வரிசையில் கூடுதலாக புதிய மாடலை அறிமுகம் செய்த டுகாட்டி...!

டுகாட்டியின் டயாவெல் பைக் 1260 மற்றும் 1260 எஸ் ஆகிய இரு வேரியண்டில் சந்தையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் தற்போது, டயாவல் 1260எஸ் மேடெரிகோ மாடலை டுகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த மாடல்களும் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், 1260 மற்றும் 1260 எஸ் ஆகிய இரு வேரியண்டுகளும் நடப்பாண்டின் மத்தியில் விற்பனைக்கு வந்துவிடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Diavel 1260 S Materico Unveiled — A One-Off Model To Commemorate Milan Design Week. Read In Tamil
Story first published: Monday, April 15, 2019, 17:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X