அட்டகாசமான ஸ்டைலில் வாகன கண்காட்சியை கலக்கிய டுகாட்டி லிமிடெட் எடிசன் பைக்: ஸ்பெஷல் புகைப்படங்கள்..!
டுகாட்டி நிறுவனம், அதன் ஹைபர்மோட்டார்ட் 950 எனும் கான்செப்ட் மாடலை இத்தாலியில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.

டுகாட்டி நிறுவனம், அதன் புத்தம் புதிய மாடலான ஹைபர்மோட்டார்ட் 950 என்ற கான்செப்ட் மாடலை, இத்தாலியில் நடைபெற்று வரும் டி எலிகன்சா வில்லா டி எஸ்டே எனப்படும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் ரம்மியமான தோற்றத்தில் வடிவமைப்பைப் பெற்றிருந்த இந்த பைக், வாகன கண்காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் வகையில் இருந்தது.

இந்த பைக்கை முதல் முறையாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில்தான் டுகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. ஆனால், அப்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஹைபர்மோட்டார்ட் 950 மாடலைக் காட்டிலும், சொற்ப அளவிலான மாற்றங்களை தற்போதைய கான்செப்ட் மாடல் பெற்றுள்ளது.

அந்தவகையில், புதிய ஹைபர்மோட்டார்ட் 950 மாடலை ஜிராஃப்பிட்டி ஸ்டைலில், புதிய கிராஃபிக்ஸ் டிசைன்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், பைக்கின் ரம்மியமான லுக்கிற்காக சிவப்பு மற்றும் கருப்பு கலந்த வண்ணக் கலவையில் பெயிண்ட் பூச்சு செய்யப்பட்டுள்ளது. மேலும், பைக்கின் பக்கவாட்டு பகுதியில் ஹைபர் என ட்யூக் ஸ்டைலில், பெட்ரோல் டேங்கில் எழுதப்பட்டுள்ளது.

இந்த புதிய தோற்றமானது, ஹைபர்மோட்டார்ட் 950 மாடலுக்கு மிகவும் ரம்மியமான லுக்கை வழங்குகின்றது. இத்துடன் பைக்கை மேலும் ஸ்டைலிஸாக்கும் வகையில், அதன் ஹெட்லேம்ப் கௌல் பகுதி மற்றும் ரியர் பகுதியில் 03 என்ற எண் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற சிறப்பான நடவடிக்கையால், இந்த பைக் ஸ்போர்ட்ஸ் லுக்கிலும் காட்சி கொடுக்கிறது.

இதுமட்டுமின்றி, பைக்கின் வீலுக்கும் ட்யூவல் டோன் கலர் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, வீல் மற்றும் டயருக்கு, கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, பல்வேறு சிறப்பம்சங்களையும் டுகாட்டி நிறுவனம் இந்த பைக்கில் சேர்த்துள்ளது.

அந்தவகையில், ரேஸிங் ஹேண்ட் குவார்ட், ட்ரை க்ளட்ச் உள்ளிட்ட சிறப்பான அக்ஸசெரீஸ்கள், ஹைபர்மோட்டார்ட் 950 மாடலில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பைக்கில் அதீத திறனை வெளிப்படுத்தும் வகையில், 937சிசி திறன் கொண்ட எல்-ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 114பிஎச்பி பவரையும், 96என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இத்துடன், பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வசதிக்காக டாப் ஸ்பெக் மாடலில் பயன்படுத்தப்படும் ஓஹ்லின்ஸ் மற்றும் ப்ரெம்போ தரத்திலான பாகங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. இவை, ரைடருக்கு பாதுகாப்பான மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும்.

டுகாட்டி நிறுவனம், ஹைபர்மோட்டார்ட் 950 கான்செப்ட் மாடலின் விலை உள்ளிட்ட மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஆகையால், இதன் உற்பத்தி எப்போது துவங்கும் என்ற தகவல் கூட வெளிவரவில்லை. ஆனால், இந்த பைக்கை லிமிடெட் வெர்ஷனில், டுகாட்டி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக மட்டும் தெரியவந்துள்ளது.

அதேசமயம், இந்த பைக் இந்திய வருகை சந்தேகத்திற்கு உரியதாக இருக்கின்றது. ஆகையால், இந்த ஹைபர்மோட்டார்ட் 950 மாடல் இந்திய வருகை குறித்த தகவல், இந்த வருடத்தின் முடிவிற்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








