புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

டுகாட்டி நிறுவனத்தின் புதிய ஹைப்பர்மோட்டார்டு 950 சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் டுகாட்டி நிறுவனத்தின் புதிய ஹைப்பர்மோட்டார்டு 950 சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய பைக் ஸ்டான்டர்டு மற்றும் எஸ்பி என்ற இரண்டு மாடல்களில் வந்தது.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 939 பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், சேஸி, எஞ்சின், சஸ்பென்ஷன் என அனைத்திலும் முற்றிலும் புதிய மாடலாக ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த நிலையில், புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் வரும் 12ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பைக்கில் ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக்கில் 937 சிசி டெஸ்டஸ்ட்ரேட்டா எல் - ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அ்திகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக்கின் ஸ்டான்டர்டு மற்றும் எஸ்பி மாடல்களுக்கு இடையில் சஸ்பென்ஷன், சக்கரங்கள், டயர்கள் ஆகியவை வேறுபடுகின்றன. ஸ்டான்டர்டு மாடலில் முன்புறத்தில் மர்ஸோச்சி ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சாக்ஸ் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

எஸ்பி மாடலின் முன்புறத்திலும், பின்புறத்திலும் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓலின்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டான்டர்டு மாடல் 200 கிலோ எடையையும், எஸ்பி மாடல் 198 கிலோ எடையையும் கொண்டுள்ளன. எஸ்பி மாடலில் மார்செஸிசினி ஃபோர்ஜ்டு சக்கரங்கள் உள்ளதே எடை குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

ஸ்டான்டர்டு மாடல் 870 மிமீ இருக்கை உயரத்தையும், எஸ்பி மாடல் 890 மிமீ இருக்கை உயர அமைப்பையும் பெற்றிருக்கின்றன. எஸ்பி மாடலில் கூடுதலாக அப் அண்ட் டவுன் குயிக் ஷிஃப்டர் வசதி உள்ளது. பாஷ் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், டுகாட்டி வீலி கன்ட்ரோல் உள்ளன.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த பைக்கில் ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. மேலும், 4.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக்கின் ஸ்டான்டர்டு மாடல் ரூ.12 லட்சத்திலும், எஸ்பி மாடல் ரூ.20 லட்சத்தை நெருங்கிய எக்ஸ்ஷோரூம் விலையிலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டான்டர்டு மாடல் தாய்லாந்திலிருந்தும், எஸ்பி மாடல் இத்தாலியில் இருந்தும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2019, 12:32 [IST]
English summary
Ducati will launch the 2019 Ducati Hypermotard 950 in India on June 12, 2019.
மேலும்... #டுகாட்டி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+