இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

இந்தியாவில் இந்த பைக்கை 2 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். இதன் விலை எவ்வளவு? என தெரிந்தால் நீங்கள் மலைத்து போவது உறுதி.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. டுகாட்டி நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் டுகாட்டி பைக்குகளுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தல அஜீத் ரசிகர்களுக்கு டுகாட்டி பைக்குகள் நன்கு அறிமுகமாகியுள்ளன.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

அஜீத் தனது திரைப்படங்களில், பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளை ஓட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக அஜீத்தின் கடந்த கால படங்களில் டுகாட்டி பைக்குகளை அதிகமாக காண முடிந்துள்ளது. ஆரம்பம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த 2 படங்களிலும் டுகாட்டி பைக்குகளை அஜீத் ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

ஆனால் இந்திய சாலைகளில் டுகாட்டி பைக்குகளை காண்பது அரிதிலும் அரிதான ஒரு விஷயமாக உள்ளது. டுகாட்டி பைக்குகளின் அதிகப்படியான விலையே இதற்கு மிக முக்கியமான காரணம். டுகாட்டி போன்ற மிகவும் விலை உயர்ந்த பைக்குகளின் விற்பனை கொடி கட்டி பறக்கும் அளவிற்கு இந்திய மார்க்கெட் இன்னும் மாற்றம் காணவில்லை.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

எனவே டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் ஒரு சில பைக்குகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில், டுகாட்டி நிறுவனம் பனிகேல் வி4 ஆர் (Ducati Panigale V4 R) பைக்கை கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் விற்பனையாகும் அதிக சக்தி வாய்ந்த ரோடு-லீகல் புரொடெக்ஸன் பைக் இதுவே.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

டுகாட்டி பனிகேல் வி4 ஆர் மோட்டார்சைக்கிள், டபிள்யூஎஸ்பிகே (WSBK) கேட்டகரி ரேஸிங் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாண்டர்டு பனிகேல் வி4 பைக்கை அடிப்படையாக கொண்டு, டபிள்யூஎஸ்பிகே ரேஸ் வெர்ஷனாக இது உருவாக்கப்பட்டுள்ளது. தோற்றம் என எடுத்து கொண்டால், இது பெரும்பாலும் ஸ்டாண்டர்டு பனிகேல் வி4 மாடலை போலவேதான் உள்ளது.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

ஆனால் இது 'ஆர்' வெர்ஷன் என்பதை தனித்துவப்படுத்தி காட்டும் வகையில் தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டுகாட்டி பனிகேல் வி4 ஆர் பைக்கில், 998 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 221 எச்பி பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த பைக்கின் கெர்ப் வெயிட் 172 கிலோ.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

ஆனால் பவர்அவுட் போதவில்லை என நினைக்கிறீர்களா? அதற்கும் வழி இருக்கிறது. 'ரேஸ் கிட்' இன்ஸ்டால் செய்வதன் மூலமாக பவர் அவுட்புட்டை 234 எச்பி ஆக அதிகரித்து கொள்ள முடியும். அப்போது இதன் எடை 165.5 கிலோவாக குறைந்து விடும். டுகாட்டி பனிகேல் வி4 ஆர் பைக்கில், மெக்கானிக்கல் அட்ஜெஸ்ட்மென்ட் உடன் ரேஸ்-ஸ்பெக் ஓலின்ஸ் சஸ்பென்ஸன், அலுமினியம் ஸ்விங்ஆர்ம் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

இந்த சூழலில் பனிகேல் வி4 ஆர் மோட்டார்சைக்கிளுக்கு 2 முன்பதிவுகள் வந்திருப்பதை டுகாட்டி இந்தியா நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள டுகாட்டி இந்தியாவின் நார்த் ஸ்டார் ஆட்டோமோட்டிவ் டீலர்ஷிப் மூலமாக இந்த 2 முன்பதிவுகளும் வந்துள்ளன. இது டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் புதிய டீலர்ஷிப் ஆகும்.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

முன்பதிவு செய்யப்பட்டுள்ள 2 டுகாட்டி பனிகேல் வி4 ஆர் மோட்டார்சைக்கிள்களும் அடுத்த மாதம் டெலிவரி கொடுக்கப்படவுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட் (BIC - Buddh International Circuit) ரேஸ் டிராக்கில் வைத்து இரண்டு பைக்குகளும் டெலிவரி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

சுருக்கமாக பிஐசி என குறிப்பிடப்படும் புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட், உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா நகரில் அமைந்துள்ளது. டுகாட்டி பனிகேல் வி4 ஆர் பைக்கின் விலை என்ன தெரியுமா? 51,80,000 ரூபாய்!! மலைத்து விட வேண்டாம். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. எக்ஸ் ஷோரூம் விலையே தோராயமாக 52 லட்ச ரூபாய் வருகிறது.

இந்தியாவில் 2 பேர் மட்டுமே இந்த பைக்கை புக்கிங் செய்துள்ளனர்! விலை தெரிந்தால் மலைத்து விடுவீர்கள்!!

டுகாட்டி பனிகேல் வி4 ஆர் பைக் உங்களுக்கு பிடித்திருந்தால், அதே சமயம் அதனை வாங்குவதற்கான பணமும் உங்களிடம் இருந்தால் உடனடியாக முடிவு செய்யுங்கள். ஏனெனில் டுகாட்டி நிறுவனம் இந்தியாவிற்கு 5 பனிகேல் வி4 ஆர் பைக்குகளை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், இரண்டு யூனிட்கள்தான் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2019, 12:22 [IST]
English summary
Ducati India Bags Two Bookings For Panigale V4 R. Read in Tamil
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+