இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்ற இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது டுகாட்டி நிறுவனம்.

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. டுகாட்டியின் ஆரம்ப விலை கொண்ட மாடல்கள் என்பதே இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில், ஸ்க்ராம்ப்ளர் ரகத்தில் பல மாடல்களை டுகாட்டி விற்பனை செய்து வருகிறது.

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

அதில், ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மற்றும் டெசர்ட் ஸ்லெட் ஆகிய இரண்டு மாடல்களையும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தி இந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டுகாட்டி நிறுவனம்.

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட்டில் X வடிவிலான பகல்நேர விளக்குகள் கொண்ட பட்டை கொடுக்கப்பட இருக்கிறது. பெரிய அளவிலான அலுமினியம் டேங்க் பேனல்களும் புதிது.

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

மறுபுறத்தில் 2019ம் ஆண்டு மாடலாக வரும் புதிய டுகாட்டி டெசர்ட் ஸ்லெட் மாடலில் சிவப்பு வண்ண ஃப்ரேமும், கருப்பு வண்ணத்திலான ஸ்போக்ஸ் வீல்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே, இது தங்க வண்ண ஸ்போக்ஸ் வீல்களுடன் கிடைத்தது.

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் வகை மாடல்களிலமே பாஷ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஹைட்ராலிக் க்ளட்ச் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

இந்த மாடல்களில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் எரிபொருள் மானியுடன் வர இருக்கிறது. மல்டி மீடியா வசதிகள் மற்றும் புளூடூத் இணைப்பு வசதிகளுடன் வர இருக்கிறது. இது நிச்சயம் மதிப்பு கூட்டும் விஷயங்களாக இருக்கும்.

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

புதிய டுகாட்டி டெசர்ட் ஸ்லெட் பைக்கில் முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பைரெல்லி ஸ்கார்ப்பியான் ராலி எஸ்டிஆர் என்ற ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கான விசேஷ டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை அணைத்து வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இது ஆஃப்ரோடு பிரியர்களுக்கு சிறந்த விஷயமாக இருக்கும்.

இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி!

இந்த புதிய மாற்றங்களுடன் கூடிய புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மற்றும் டெசர்ட் ஸ்லெட் மாடல்கள் ரூ.50,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2019, 18:00 [IST]
English summary
According to reports, Ducati is planning to Launch two new scrambler models in India by this month.
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+