4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

இவி நிறுவனம் 4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கி இருக்கும் இவி நிறுவனம் அதிரடியாக 4 புதிய மாடல்களை உருவாக்கி இருக்கிறது. இவி 4U, Xeniaa, Wind மற்றும் Your ஆகிய பெயர்களில் இந்த புதிய இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன.

4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

இவி நிறுவனத்தின் இந்த 4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஸெனியா மற்றும் 4யு ஆகிய இரண்டு மாடல்களும் பிரிமீயம் ரக மாடல்களாக நிலைநிறுத்தப்பட இருக்கின்றன. இந்த ஸ்கூட்டர்களில் பாஷ் நிறுவனத்தின் 250 வாட் மின் மோட்டாரும், 60V 20 ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் முழுமையான சார்ஜ் செய்யும்போது 60 முதல் 60 கிமீ தூரம் வரை பயணிக்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 6 மணிநேரம் பிடிக்கும். இந்த ஸ்கூட்டர்களின் பேட்டரியை மாற்றும் வாய்ப்பு வழங்கப்படுவதோடு, டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் கொடுக்கப்படுகின்றன.

4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

மறுபுறத்தில் இவி நிறுவனத்தின் விண்ட் மற்றும் யுவர் ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களும் விலை குறைவான மாடல்களாக நிலைநிறுத்தப்பட இருக்கின்றன. இந்த ஸ்கூட்டர்களிலும் 250 வாட் மின் மோட்டாரும், 60 V 20 ஏச் பேட்டரியும்தான் பயன்படுத்தப்படும். ஆனால், இவற்றில் லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு பதிலாக லீட் ஆசிட் பேட்டரி இடம்பெற்றிருக்கும்.

4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

இந்த இரண்டு ஸ்கூட்டர்களின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 7 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் 50 முதல் 60 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் பேட்டரிகளை கழற்றி மாட்டும் வசதி இருக்காது. அனைத்து ஸ்கூட்டர்களும் மணிக்கு 25 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கும். நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.

MOST READ: புதிய வரலாறு படைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... மக்கள் அமோக வரவேற்பு... என்னவென்று தெரியுமா?

4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

இவி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கீ லெஸ் என்ட்ரி வசதி, ஆன்ட்டி தெஃப்ட் லாக்கிங் சிஸ்டம், யுஎஸ்பி மொபைல் சார்ஜர் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

MOST READ: மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளியானது... 7 கோடி ரூபாய் காரை வாங்கிய பிரபல நடிகர்... யார் தெரியுமா?

4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

இந்த ஸ்கூட்டர்களில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பெருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்களில் 10 அங்குல அலாய் வீல்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் இடம்பெற்றுள்ளன.

MOST READ: கார் வாங்கலியோ கார்... கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மாருதி!

4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

அடுத்த மாதம் இந்த புதிய ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த ஸ்கூட்டர்களுக்கு ரூ.1,000 முன்பணத்துடன் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி அளிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஸ்கூட்டர்கள் மத்திய அரசின் ஃபேம்-2 என்ற திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான தகுதியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
EeVe India is all set to launch their range of electric scooters in the market next month. The 4U, the Xeniaa, the Wind, and the Your are the four electric scooters which are due to launch. The bookings for the entire range has already begun with a refundable booking amount of Rs 1,000.
Story first published: Wednesday, August 28, 2019, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X