ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

இந்திய எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் நிறுவனமான ரிவோல்ட் தனது லேட்டஸ்ட் தயாரிப்பு வாகனமான ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை விநியோகம் செய்ய துவங்கியுள்ளது. டெல்லியில் எக்ஸ்ஷோரூமில் இருந்து தற்சமயம் ஆர்வி400 பைக்குகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

மேலும் இந்நிறுவனத்தின் புனே நகரத்தில் இரு ஷோரூம்களை அமைப்பதற்கான திட்டமும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த மாதம் நவம்பரில் இந்த ஷோரூம்களில் இருந்து முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிகிறது.

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

மீண்டும் ஆர்வி400 பைக் விஷயத்திற்கு வருவோம். ரிவோல்ட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளை அறிமுகம் செய்திருந்தது. அந்த சமயத்திலேயே இப்பைக்குகளுக்கு சுலப மாதத்தவணை திட்டம் அறிவிக்கப்பட்டதால் இப்பைக்குகளுக்கான முன்பதிவுகள் சூடுப்பிடித்தன.

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

இதனால் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளுக்கான முன்பதிவை அறிமுகப்படுத்திய ஒரு வாரத்திலேயே நிறுத்தியது, ரிவோல்ட் நிறுவனம். அதன்பின் கடந்த மாதம் மீண்டும் புக்கிங்கை தொடங்கியபோது, இந்த இரண்டாவது புக்கிங்கிற்கான பைக்குகள் நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதத்தில் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவித்தது.

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

மை ரிவோல்ட் பிரைஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சுலப மாதத்தவணை திட்டத்தில் ஆர்வி300 பைக்கிற்கு மாதத்தவணையாக ரூ.2,999-ம், எண்ட்ரீ-லெவல் மாடல் ஆர்வி400 பைக்கிற்கு ரூ.3,499-ம், டாப் வேரியண்ட் மாடலான ஆர்வி400 ப்ரீமியமிற்கு ரூ.3,999-ம் அறிவிக்கப்பட்டன.

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

37 மாதங்களுக்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்ட இந்த சுலப மாதத்தவணையில், முன்பதிவுக்கான கட்டணம், இன்சூரன்ஸ் ப்ரீமியம் போன்றவையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. மேலும் ரிவோல்ட் நிறுவனம் இப்பைக்குகளின் விலையை மற்ற நிறுவன பைக்குகளை போல ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்தும் விதமாக ஒரு குறிப்பிட்ட விலையையும் அறிவித்தது.

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

ரிவோல்ட் ஆர்வி300-ல் 2.7 கிலோவாட்ஸ் லித்தியம்-இரும்பு கலந்த பேட்டரி தொகுப்பு உள்ளது. இதனுடன் 1.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. ஆர்வி300-ன் அதிகப்பட்ச வேகம் 65கிமீ/நேரம் ஆகும். இப்பைக் சிங்கிள் சார்ஜில் 180 கிமீ வரை செல்லும் திறனுடையது.

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

ரிவோல்ட் ஆர்வி400, இன்னும் கொஞ்சம் பெரியதாக 3.24 கிலோவாட்ஸ் லித்தியம்- ஐயன் பேட்டரியுடன் உள்ளது. இதனுடன் 3 கிலோவாட்ஸ் மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகப்பட்ச வேகமாக 85 கிமீ/நேரம் உள்ளது. ஒரே சார்ஜில் இந்த பைக் 156 கிமீ தூரம் வரை செல்லும்.

Most Read:நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் இந்திய அறிமுக தேதி வெளியானது!

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

இவ்விரு பைக்குகளிலும் எல்இடி ஹெட்லைட்ஸ், பின்புற எல்இடி லைட்ஸ், முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற நவீன தொழிற்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஏஐ டெக்னாலஜியும் இப்பைக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பைக்கை ஓட்டுப்பவர் இந்த ஆப்பின் மூலம் பைக் ட்ராக்கிங், பேட்டரி ஸ்டேட்டஸ், பைக்கில் உள்ள பாகங்களின் தற்போதைய நிலை, சார்ஜிங் லொக்கேஷன், ஜிபிஎஸ் மற்றும் பல நேரலையான அப்டேட்களை பெற முடியும்.

Most Read:பிஎஸ்6 என்ஜின் தரத்தில் உருவாகிவரும் சுசுகியின் நியூ ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 பைக்குகள்...

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

ரிவோல்ட் நிறுவனத்தின் இந்த பசுமை வாகனம் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரவே தயாரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்சமயம் பெருகி வரும் காற்று மாசுப்படுதலை குறைக்க இந்த எலக்ட்ரிக் பைக்குகள் பெரியளவில் உதவி புரியும் என ரிவோல்ட் நிறுவனம் நம்புகிறது. இந்த பைக்குகளுடன் மேலும் சில நிறுவனங்களின் எலக்ட்ரிக் பைக்குகளும் தொடர்ந்து வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Revolt RV400 Deliveries Begin: First Electric Bike Delivered In Delhi
Story first published: Wednesday, October 16, 2019, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X